இம்சை அரசர்கள்: பொது சேனாவுடன் ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாய் முடிந்ததாம் !! கடையை எரித்தவர்கள், பள்ளியை உடைத்தவர்களுக்கு எல்லாம் பொது மன்னிப்பா..?

· · 724 Views

 


“2069 இல் முஸ்லிம்கள் இந்த நாட்டில் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாய் மாறி எங்களை ஓவர் டேக் செய்துவிடுவார்கள் , முஸ்லிம் கடைகளில் கருத்தடை மாத்திரை சாப்பாட்டில் கலக்கப்படுகிறது”

 

 

 

 

இப்படியான திருவசனங்கள் அடங்கிய ஸ்கிரீன் சாட்டுகள் கிடைக்கப் பெற்றேன்.இதெல்லாம் பார்த்ததும் எனக்குக் கவலையாய் இருந்தது.இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கண்டு அல்ல..இவர்களின் கற்பனைப் பஞ்சத்தை நினைத்து..

 

 

 

 

தமிழ்ப் பாட்டுக்களையும் படங்களையும் அப்படியே காப்பி பண்ணி வாந்தி எடுக்கும் சிங்கள பைலா கூட்டத்தை சகட்டுமேனிக்கு விமர்சிப்பவர்கள் ஏன் ஒரு க்ரியேட்டிவிட்டியே இல்லாமல் அதரப் பழசான டாபிக்கைக் கையில் எடுத்து இருக்கிறார்கள் என்று புரியவில்லை.சம்பிக்க ரணவக்க 2090 இல் இலங்கை முஸ்லிம் நாடு ஆகும் என்று அவரது ‘அல்கைதா ‘ என்ற புத்தகத்தில் எப்போதோ சொல்லிவிட்டார். அடுத்தவருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு அந்தப் புனைவு செல்ல இருக்கிறது.போகட்டும்.

 

 

 

 

 

அடுத்த மேட்டர் இந்த முஸ்லிம் சாப்பாட்டுக் கடைகளில் கருத்தடை மாத்திரை கலக்கும் விவகாரம்..2012களில் இருந்து சமூக வலைதளங்களில் சிங்கள இனவாதத் தரப்பு எடுத்துக் கொண்டிருக்கும் அதே மஞ்சள் கலர் வாந்தியை காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். இவர்களுக்கும் மெர்சல் படம் எடுத்த அட்லிக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது.அட்லியைக் கலாய்க்க இவர்களுக்கு எந்தவிதத் தார்மீக உரிமையும் இல்லை.

 

 

 

 

இன்றும் முதலாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘இலங்கை அழகான நாடு ‘ என்று இருக்கிறது.உலகத்திற்கு அதிகளவில் அகதிகளை உற்பத்தி செய்த நாடு என்று கட்டாயம் எடிட் செய்து இருக்க வேண்டும்.கிட்டத்தட்ட 20 இலட்சம் தமிழ்ப் பேசும் மக்கள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

 

 

 

 

கனடாவில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்யும் அளவுக்குப் பலம் பெற்று இருக்கிறார்கள்,ஐரோப்பா எங்கும் சுயமரியாதை உடன் வாழ்கிறார்கள்.அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் சமயம், ‘தமிழர்களின் வாக்குகள் யாருக்கு?’ என்று கேட்டு விகடன் கட்டுரை எழுதியது..இப்படி புலம் பெயர்ந்தவர்கள் அங்கே கிடைக்கும் தரமான வாழ்க்கையை மறுத்துவிட்டு இங்கே வரப் போவதில்லை.

 

 

 

 

 

ஆனால் போராளிகளினதும் ஃபேக ஐடிக்களினதும் பதிவுகளைக் கண்டு அறச்சீற்றம் அடைந்து நாளை அத்தனை பேரும் கட்டுநாயக்க வந்தால் சந்தேகமே இல்லை.மாலை 7 மணி ஆகும் போது 20 வீதம் ஆகிவிடுவார்கள்.சந்தோஷம்….

 

 

 

 

2013 இல் எனது நண்பன் ஒருவன் இருந்தான் .’அவனது கவலை நோலிமிட்டில் வழங்கப்படும் டொபி பற்றியது.சிஙளவர்களுக்கு மட்டும் டொபி வழங்கப்படுகிறதாம்.அதைச் சாப்பிட்டால் இனவிருத்தியே இல்லாமல் போகுமாம்’.ஆனால் பாருங்கள்.அவனது கல்யாணத்திற்கு அரை வாசி துணிகள் வாங்கியதே நோலிமிட்டில்..நானும் இன்னொரு சிங்கள நண்பரும் 2015 இல் நடந்த அவனது திருமணத்தில் பரிசோடு பரிசாக ஒரு கொண்டம் போட்டு வைத்தோம்..பார்த்துவிட்டு சாகட்டும்..

 

 

 

 

 

எமது சமூகத்தைப் பார்த்தால் இப்படி திட்டம் இட்டு இன விருத்தியைத் தடுக்கும் மொசாட் க்ரூப் மாதிரியா இருக்கிறது ? ஏதோ இலுமினாட்டி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.தலைமையே இல்லாத கம்ணாட்டி சமூகம் இது.முஸ்லிம் தலைவர்கள் என்று ஒரு கூட்டம் சுற்றுகிறது.எவன் ஆட்சி செய்தாலும் போய்ப் பஞ்சம் பிழைக்க ஒட்டிக் கொள்ளும்.ஒரு மனோ கணேசனுக்கு இந்த 21 லைட் தூண்களும் சமனாகமாட்டார்கள்.

 

 

 

 

 

ஆன்மீகத் தலைமையைப் பாருங்கள்.இன்டெலக்சுவல் என்றும் சுறா சபை என்றும் அப்பப்பா..எத்தனை இருக்கிறது..ஞானசார என்ற பைத்தியத்தால் பட்ட கஷ்டங்களுக்கே விடிவு கிடைக்கவில்லை.

 

 

 

 

கடையை எரித்தவர்கள், பள்ளியை உடைத்தவர்களுக்கு எல்லாம் தண்டனை கிடைக்கும் என்று பார்த்தால் ஏதோ மூடிய அறையில் பொதுபல சேனாவுடன் ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாய் முடிந்ததாம்.பெரிய ஒஸ்லோ ஒப்பந்தம் கைச்சாத்தப் போகுது..

 

 

 

 

இப்படிப்பட்ட கோழைகளும் கூழைக் கும்பிடு அரசியல்வாதிகளும் சேர்ந்தா இந்தத் தமிழ்த் தரப்புக்கு சதி செய்யப் போகிறார்கள்? அதுவும் உயர் மட்ட சதி என்றால் பரவாயில்லை.

 

 

 

 

எங்கேயோ ஹோட்டலில் இருந்து கொண்டு எப் எம் வானொலிகளுக்கு போன் போட்டு ”இந்தப் பாட்டை எனக்கும் எனது அப்பா,அம்மா, மாமா, போனவருசம் காலமான பெரிய உம்மா என்று தொடங்கி ஒரு லிஸ்டை வாசித்து விட்டு உற்சாகமாய் கொத்து ரொட்டி போடுபவனா கர்ப்பத்தடை கக்கா தடை எல்லாம் போடப் போகிறான்..அட போப்பா…!!!

 

Zafar Ahmed

One comment

  1. ஷபர் அஹ்மட்,

    சும்மா பின்னி எடுத்திட்டீங்க. ஒரு “க்ரியேடிவ் ரைடர்” க்குள்ள எல்லா அம்சங்களும் நிறையவே உள்ளன. உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்க ஆவல். ஆனாலும் ஒன்றை விமர்சிக்க வேண்டியுள்ளது. அதுதான் ஜம்மியா-அல் -உலமா (இந்த பெயரில் மாத்திரமல்ல அந்த நபர்களும் இந்த பதத்திற்கு தகுதியானவர்களா என்பதில் எனக்கு சந்தேகம்) – ஞானசார பேச்சுவார்த்தை. இந்த பேச்சு வார்த்தை மூலம் ஞானசார அடங்கிப்போவார் என்றால் அது ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களுக்கு குறுகிய, நீண்ட கால பயனை தரும் என்றே நம்புகிறேன். முஸ்லீம்கள் விடயத்தில் இவர் ஒதுங்கியிருந்தால் மற்றவர்களுக்கு தீணி கிடைப்பது கஸ்டமாகும். அல்லது பலர் சொல்வது போல் இவர் ஜப்பான் சென்றுவிடால் அதுவே மற்றவர்களுக்கு இவர் தங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிடார் என்ற பிரமேயை ஏற்படுத்த உதவும். ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகள், நட்டங்களை மன்னித்து எதிர்காலத்தில் அப்படி அல்லது அதைவிடவும் பாரதூரமான விடயங்கள ஏற்படாமல் தடுப்பதென்பது புத்திசாளிதனமே.

Leave a Reply

Your email address will not be published.