“இந்திய முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் ..!! இந்திய உப ஜனாதிபதி அன்சாரியின் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு

· · 402 Views

நாட்டில் வாழும் முஸ்லிம்கள், அமைதியின்றியே வாழ்கின்றனர் என்று, இந்திய குடியரசுத் துணைத் தலைவராக தன்னுடைய இறுதிச் செவ்வியில், ஹமிட் அன்சாரி கூறியுள்ளார்.

 

 

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஹமிட் அன்சாரியின் பதவிக்காலம், நேற்றுடன் (10) நிறைவடைந்தது. இவர், கடந்த 2007ஆம் ஆண்டு முதன்முறையாக துணை தலைவராகப் பதவியேற்றதோடு, 2012ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாகவும் குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.

 

 

 

அவர், துணைத் தலைவராக நேற்று வழங்கிய இறுதிச் செவ்வியில், மாடு விழிப்புணர்வு மற்றும் சகிப்புத்தன்மை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்தா்ர.

 

 

 

“ஆதிக்கமான மனநிலைமை, சகிப்புத் தன்மையின்மை போன்ற பல்வேறு காரணங்களினால், ஒரு வகையான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

 

 

“தாக்கிக் கொலை  செய்யப்படுதல், படுகொலை செய்யப்படுதல் போன்றவற்றால், இந்திய விழுமியங்கள் குறைந்துள்ளன, சட்டத்தை அமுல்படுத்தும் வழக்கமான பணி, என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில், தீர்மானிப்பதற்கான அதிகாரிகளின் திறன் பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு இடங்களில் சிதைவடைந்துள்ளது. அத்தோடு, இந்தியவர்களின் இந்தியத் தன்மை என்பது கேள்விக்குட்படுத்தப்படுவது, மிகவும் மனதைப் பாதிக்கக் கூடிய சிந்தனை” என்று அவர் கூறியுள்ளார்.

 

 

 

“இந்திய விழுமியங்கள் குறைந்துள்ளன என்று ஏன் கூறுகின்றீர்கள்?” என்று வினவியபோது, “நாம் பல நூற்றாண்டுகளாக, பன்முகத்தன்மையான சமூகமாக வாழ்ந்துள்ளோம். 70 ஆண்டுகளாக மாத்திரமல்ல, பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து, நூற்றாண்டுகளாக வாழ்ந்துள்ளோம்.

 

 

 

 

“நான் ஓர் இந்தியன், அதுதான் உண்மை” என்று அவர் கூறியுள்ளார்.

 

 

 

அவருடைய (ஹமிட் அன்சாரி) கருத்துகளை, பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொண்டாரா என்று வினவியபோது,   “குடியரசுத் துணை தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல்களை, வெளிப்படையாகக் கூறினால், அது, ஜனநாயக மரபுக்கு எதிரானது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.