இந்தியாவில் மஹிந்த..!! விஷேட பூனைப்படை பாதுகாப்பில் வளம் வருகிறார்

· · 511 Views
மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு கொமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் இன்றும் நடைபெறும் பௌத்த கலாசார மாநாட்டில் பங்கேற்பதற்காக மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் மும்பைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவர் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், QRT எனப்படும் துரித பதிலடிக் குழு (Quick Response Team) சிறப்பு பாதுகாப்பை வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச நேற்று மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள பழைமை வாய்ந்த குகைச் சிற்பங்கள், ஓவியங்களைப் பார்வையிடச் சென்றிருந்தார்.
இதன் போது, அவருக்கு கியூஆர்ரி கொமாண்டோக்கள் சிறப்பு பாதுகாப்பை வழங்கினர்.

 

Leave a Reply

Your email address will not be published.