இது வேறயா..? : “புத்தளம் உற்பட 14 மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை !! ஒக்டோபர் 7

· · 1014 Views

பிராந்திய ரீதியிலான சுனாமி ஒத்திகை நிகழ்வுகளை எதிர்வரும் 07 ஆம் திகதி நடாத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மையம் தீர்மானித்துள்ளது.

images

இந்த ஒத்திகை நிகழ்வுகள் 14 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இன்று (05) தெரிவித்துள்ளார்.

அம்பாறை, மாத்தறை, கிளிநொச்சி, மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், களுத்தறை, முல்லைத்தீவு, கம்பஹா, புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்திய பிராந்திய சுனாமி அனர்த்த எச்சரிக்கை மைத்திய நிலையத்தின் ஆபத்து அறிவிக்கும் முறைமையைப் பின் தொடர்ந்து அதற்கு சமாந்திரமாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் உபகரணங்களைப் பயன்படுத்தி இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது.

எமது நாட்டுக்கு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.