இதுதாண்டா நீதி : இரண்டு முறை பிடியானை பிறப்பிக்கப்பட்ட ஞானசாரருக்கு 2500/- பிணையில் செல்ல அனுமதித்தார் நீதவான்

· · 503 Views

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று விடுத்த பிடியாணை உத்தரவினை திரும்பப் பெற்றுள்ளது.

 

 

இரு தடவைகள் வழக்குகளில் ஆஜராகாத ஞானசார தேரரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கடந்த 15 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

 

இந்த நிலையில் தனது சட்டத்தரணியுடன் கொழும்பு நீதிமன்றத்தில் ஞானசார தேரர் இன்று புதன்கிழமை ஆஜரானார்.

 

 

இதன் போது நீதிபதி லால் ரணசிங்க பண்டார அவரை 2500 ரூபாய் பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.