இணைந்த கல்பிட்டி பிரதேஷ சபையின் சேர்மனாக ஆஷிக் நியமனமாவார்..? கடையாமட்டையின் முதலாவது சேர்மன்

· · 1279 Views

கல்பிட்டி பிரதேஷ சபைக்கான தேர்தலில்  17,392  வாக்குகளுடன் 11 ஆசனங்களைக்கைப்பற்றி இருக்கும்  ஐக்கியத் தேசியக் கட்சியானது  தனது கூட்டணிக்  கட்சிகளுடன்   ஆட்சியமைக்கும்  பட்சம்  கல்பிட்டி  பிரதேஷ  சபையின்  தவிசாளராக  ஐக்கியத்  தேசியக்  கட்சியுடன்  இணைந்துப்  போட்டியிட்ட  உறுப்பினர்  ஆஷிக் நியமிக்கப்பட  உள்ளதாக  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரசின்  மக்கள்  பிரதிநிதி  ஒருவர்  புத்தளம்  டுடேக்குத்  தெரிவித்தார்.

 

 

 

இம்முறை  புத்தளம்  மாவட்டத்தில்  ஐக்கியத்  தேசியக்  கட்சியுடன்  இணைந்துப்போ ட்டியிட்ட  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  கட்சியானது  ஜனாப். ஆஷிக்கின் நியமன  விடயத்தில்  ஐக்கியத்  தேசியக்  கட்சத்  தலைமைக்கு  நெருக்கடியை  கொடுத்துள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

 

 

 

 

 

இம்முறைத்  தேர்தலில்  தமது  கட்சி  இணைந்துப்  போட்டியிட்டதாலேயே  மாவட்டத்தில்  ஐக்கியத்  தேசியக்   கட்சி  பெருமளவான வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே வடக்குக்  கிழக்குக்  வெளியே  தனது  கட்சி  ஆட்சி  பீடத்தை  கேட்கும்  ஒரே  சபை  இதுதான்  என்பதால்  பிரதமர்  இதற்கு  உடன்படுவார்  என  தமது  கட்சி  நம்புவதாகவும்  அவர்  கூறினார்.

 

 

 

இதற்க்கான  முழு  ஒத்துழைப்பையும்  ஐக்கியத்  தேசியக்  கட்சி  வழங்கும்  என  தாம்  நம்புவதாகவும்  அவர்  குறிப்பிட்டார்.

 

 

 

வடக்குக்  கிழக்குக்கு  வெளியில்  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  கட்சி,  ஆட்சியைக்  கேட்கும்  ஒரே  பிரதேஷம்  கல்பிட்டி  பிரதேஷ  சபையாக  இருக்கும்  என  A.C.M.C.  கட்சியின்  தலைவரும்  அமைச்சருமான  ரிஷாத்  பதியுதீன்  புத்தளம் டுடேக்கு  முன்னர்  கூறி  இருந்தமை  குறிப்பிடத் தக்கது.

 

 

இதற்கிடையில்   வெகு  காலமாக  கல்பிட்டி  பிரதேஷ சபையை  மற்ற  பிரதேஷ அரசியல்வாதிகளே   ஆள்கின்றனர் என்பதால்  இம்முறை  தலைவர்  பதவி  கல்பிட்டியை சேர்ந்த  தனக்கு வழங்க  வேண்டுமென  உறுப்பினர்  அக்மல்  வலியுறுத்தி  வருவதும்  குறிப்பிடத்  தக்கது.

Leave a Reply

Your email address will not be published.