ஆளுநர்களை நியமித்தார் ஜனாதிபதி..!! முஸ்லிம் ஒருவரை வடக்கு ஆளுநராக நியமிக்கும்படி வேண்டுகோள் –

· · 583 Views

இலங்கையில் உள்ள ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஆளுநர்கள் அனைவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

 

 

இவ்வாறு நியமிக்கப்பட்ட அனைத்து ஆளுநர்களும் இதற்கு முன்னர் வேறு மாகாணங்களில் பணியாற்றியிருந்த நிலையில், மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே மாகாணத்தில் பணியாற்ற முடியாத நிலையில் வேறு மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ கலந்துகொண்டிருந்தார்.

 

இந்த முறை மாகாண ஆளுநர் நியமனத்தில் முஸ்லிம் ஒருவர் உள்வாங்கப்படாமையால்  முஸ்லிம்கள் பெரிதும் கவலை தெரிவித்துள்ளனர்.

 

இந்த அரசாங்கத்திற்கு நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் தமது வாக்குகளை அளித்து அவர்களை பதவியில் அமர்த்தியுள்ள முஸ்லிம்களைக் கௌரவிக்கும் முகமாக தற்போது வெற்றிடமாக விடப்பட்டுள்ள வடக்கு ஆளுநராக ஒரு முஸ்லிம் கல்வியாளரை நியமிக்கும் படி இலங்கை முஸ்லிம்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

 

 

 

01. ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்

02. கே.சி லோகேஸ்வரன் – வட மேல் மாகாணம்

03 நிலுகா ஏகநாயக்க – சபரகமுவ மாகாணம்

04 ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்

05 மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்

06 எம்.பி ஜயசிங்க – வட மத்திய மாகாணம்

07 பி. பி. திசாநாயக்க – ஊவா மாகாணம்

Leave a Reply

Your email address will not be published.