
ஆரம்பிச்சுட்டாங்க : மகிந்த சார்ப்பு கட்சியில் போட்டியிட பாலியல் லஞ்சம் கோரிய மகிந்தவின் செயலர்கள்..!! மதுஷா ராமசிங்க வீடியோவில் கூறுவது என்ன..?
· · 405 Viewsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துவரும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலஙகா பொதுஜன முன்னணியில் உள்ள பலர், தேர்தலில் போட்டியிடுவதற்குதன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து பெண் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளார்.
இலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா ராமசிங்க என்பவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றையும் ஒப்படைத்தார்.
கொழும்பு – இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்றைய தினம் முற்பகல் இலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா ராமசிங்க, கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தினார்.
தேர்தலில் போட்டியிட பாலியல் இலஞ்சம்கோரிய மஹிந்த அணி
தேர்தல்கள் ஆணையாளரே, வேட்புமனுவைப் பெறுவதற்கு பாலியல் இலஞ்சம் வழங்க வேண்டுமா? என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதையை ஏந்தியவாறு கறுப்பு ஆடையில் வந்த அவர் தனது அமைதிப் போராட்டத்தை நடத்த ஆரம்பித்தார்.
இவரது போராட்டம் மீது அப்பகுதியிலுள்ள பலரது அவதானம் திரும்பிய அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள அதிகாரி ஒருவரும் அவரிடத்தில் வந்து விசாரித்தார்.
தேர்தலில் போட்டியிட பாலியல் இலஞ்சம்கோரிய மஹிந்த அணி
தனது போராட்டம் தொடர்பான விளக்கம் அடங்கிய கடிதமொன்றை மதுஷா ராமசிங்க அந்த அதிகாரியிடம் காண்பித்தார். இதனையடுத்தும் போராட்டத்தை தொடர்ந்தார்.
இந்த நிலையில் விடயம் அறிந்த பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்ததோடு அவரிடம் போராட்டத்திற்கான காரணத்தை கேட்டறிந்ததை அடுத்து அவ்விடம் விட்டுச் சென்றனர்.
இறுதியில் ஆணைக்குழுவுக்குள் சென்ற மதுஷா ராமசிங்க தனது முறைப்பாடு அடங்கிய கடிதத்தை கையளித்துவிட்டு போராட்டத்தையும் கைவிட்டார்.
தேர்தலில் போட்டியிட பாலியல் இலஞ்சம்கோரிய மஹிந்த அணி
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு நான் கடந்த இரண்டு வருடங்களாக ஆதரவளித்து வந்தேன். உள்ளூராட்சி தேர்தலில் முதல் வாய்ப்பை நகர சபையின் ஊடாக பெற்றுத்தருமாறு எனது கட்சியிடம் கேட்டிருந்ததேன். கெஸ்பேவ தொகுதியில் வேட்பாளர் பட்டியலில் இடமில்லாமையினால் அந்த இடத்தை எனக்கு தரமுடியாது எனக் கூறிவிட்டனர். அதனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பெசில் ராஜபக்சவின் ஆலோசனைப்படி கோட்டை தொகுதில் வதிவிடம் பெற்று, தேர்தலில் களமிறங்க அனைத்து தலைவர்களினதும் ஆசிர்வாதம் பெற்று போட்டியிட விண்ணப்பித்திருந்தேன்.
வேட்பாளர் தெரிவு நேர்முகப்பரீட்சையில் பங்கேற்று தெரிவாகினேன். எனினும் எனது பெயர் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்று எனக்கு அறியக்கிடைத்தது. பெண் என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்தேன். அதிலுள்ள சில செயலாளர்கள், குறிப்பாக மஹிந்த ராஜபக்சவின் நெருக்கமானவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள சில செயலாளர்கள் பாலியல் ரீதியாக முன்வைக்கின்ற யோசனையினால் பௌத்த நாட்டில் பிறந்த பெண் என்ற வகையில் அசௌகரியத்திற்குத் தள்ளப்பட்டேன்.
பெண்களுக்கு 25 வீத ஒதுக்கீட்டிற்கான போராட்டம் நடத்தப்படும்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எவ்வாறு பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும்? குறிப்பாக, கமராவுக்கு முன்பாக நிர்வாணமாக இருக்க இணங்கினால்தான் வேட்புமனுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அக்கட்சியிலுள்ள இரண்டு அதிகாரிகள், என்னிடம் யோசனை தெரிவித்தனர். அதேபோன்று இன்னுமொருவர் தகாத வார்த்தையை பயன்படுத்தியதோடு, தாம் தீர்மானித்தால் உங்களுக்கான வேட்புமனுவை இரத்து செய்வதாக மிரட்டினார்.
இதுகுறித்து மஹிந்த ராஜபக்சவுக்கு நான் அறிவுறுத்தியதோடு அதுகுறித்து விசாரிப்பதாக அவர் கூறினாலும் இறுதிவரை அது இடம்பெறவில்லை. பெண்கள் என்பது வெறும் உணவல்ல. பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி பாலியல் இலஞ்சம் அல்ல.அதனால்தான் அத்தனை பெண் பிரதிநிதிகளுக்காக தனியான நின்று போராட வந்தேன். எனது முறைப்பாட்டுக் கடிதத்தையும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கின்றேன்” என்றார்.