ஆய்வு : ஹிஸ்புல்லாஹ்வின் இமாலய வெற்றிக்கு காரணம் என்ன..? எப்படி வென்றார்..? அவரின் வெற்றிக்கு N.F.G.G. எவ்வாறு மறைமுகமாக உதவியது..?

· · 722 Views

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)


நடைபெற்று முடிந்த காத்தான்குடி நகர சபை தேர்தல் தொடர்பில் எனது அவதானிப்பையும் கருத்தையும் இந்த பதவின் மூலம் வெளியிடலாம் என நினைக்கின்றேன்.

 

 

 

 

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உள்ளராட்சி மன்றங்களில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் முஸ்லிம் உறுப்பினர்கள் மாறியுள்ளனர்.

 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகள் மற்றும் 9 பிரதேச சபைகள் உள்ளிட்ட 12 உள்ளராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 8 உள்ளுராட்சி மன்றங்களில் இந்த 66 முஸ்லிம் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான முஸ்லிம் உள்ளுராட்சி மன்றமான காத்தான்குடி நகர சபை தேர்தலில் சிரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றியீட்டியுள்ளது.

 

 

 

 

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் ஆலோசனையில் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிட்ட சிரீலங்கா சுதந்திரக் கட்சி 10 வட்டாரங்களையும் கைப்பற்றியதுடன் காத்தான்குடி நகர சபையின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுள்ளது.

 

 

 

 

காத்தான்குடி நகர சபைக்கு ஏற்கனவே 16 ஆசனங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் இந்த தேர்தல் முறையிலுள்ள ஒழுங்குகளுக்கு ஏற்ப விகிதாசாரப்படி 18 உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

இதனடிப்படையில் காத்தான்குடி நகர சபை தேர்தலில் சிரீலங்கா சுதந்திரக் கட்சி 12499 வாக்குகளைப்பெற்று 10 ஆசனங்களையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 5815 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4633 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 779 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர்.

 

 

 

 

 

இந்த தேர்தலின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் முதல் இறுதி பிரச்சாரக் கூட்டம் வரை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தான் பத்து வட்டாரத்திலும் வெற்றியீட்டுவேன் என்பதை பலமாக கூறி வந்ததுடன் பத்து வட்டாரங்களிலும் வெற்றியை உறுதிப்படுத்தியும் காட்டினார்.

 

 

 

 

இராஜாங்க அமைச்சரை நோக்கிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் மற்றும் அவரினால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மீதான விமர்சனங்களை எல்லாம் முறியடித்து இந்த தேர்தலில் இராஜாங்க அமைச்சரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.

 

 

 

 

 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் பொறியியலாளர் சிப்லி பாறூக்கும் ஒன்று சேராமல் ஆளுக்காள் பிரிந்து நின்று இத் தேர்தலில் போட்டியிட்டதானது இராஜாங்க அமைச்சருக்கு கிடைத்த மேலும் ஒரு பலமான வெற்றியாகும்.

 

 

 

 

தேர்தல் வேட்புமனுவுக்கு முந்திய தினங்களில் முத்தரப்பையும் ஒன்று சேர்ப்பதற்கு முயற்சித்து தோல்வியடைந்த எஸ்.ஆர்.ரி. எனப்படும் காத்தான்குடியிலுள்ள புத்தி ஜீவிகள் அமைப்பானது

 

 

 

 

 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியையும் சிப்லி பாறூக்கையும் ஒன்று சேர்ப்பதற்கு இறுதி நேரத்தில் எடுத்த முயற்சியும் தோல்வி கண்ட நிலையில் இந்த எஸ்.ஆர்.ரி. எனப்படும் காத்தான்குடியிலுள்ள புத்தி ஜீவிகள் அமைப்புடன் வேட்புமனுவுக்கான இறுதி நேரம் வரை தொடர்பிலிருந்ததுடன் இந்த புத்தி ஜீவிகளின் அசைவை நூறுவீதம் அவதானித்து அவர்களுடன் மிக நெருக்கமான தொடர்பை பேணிவந்தது இராஜாங்க அமைச்சருக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றியாகும்.

 

 

 

 

 

காத்தான்குடி நகர சபை தேர்தலை பொறுத்தவரைக்கும் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற நகர சபை தேர்தலையும் இம்முறை நடைபெற்ற தேர்தலையும் ஒப்பீட்டு பார்க்கையில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10357 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களைப் பெற்றிருந்ததுடன் நல்லாட்சிக்கான தேசிய 6809 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1429 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது.

 

 

 

 

 

 

காத்தான்குடி நகர சபையின் அன்றைய உறப்பினர் தொகை 9 ஆக இருந்ததுடன் அன்றைய தேர்தலில் 19499 பேர் வாக்களித்திருந்தனர்.

 

 

 

 

 

இம்முறை நடைபெற்ற தேர்தலை ஒப்பிடுகையில் 24334 வாக்குகள் மொத்தமாக அளிக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

இதில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிட்ட சிரீலங்கா சுதந்திரக் கட்சி 12499 வாக்குகளைப் பெற்று 10 வட்டாரங்களையும் வெற்றி பெற்றுள்ளதுடன் தனித்துவமான ஆட்சியையும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வே தீர்மானித்தள்ளார்.

 

 

 

 

 

எனினும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை வைத்து பார்க்கும் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வாக்கு வங்கி கடந்த மூன்று தேர்தல்களை ஒப்பிடுகையில் சம நிலையிலேயே காணப்படுகின்ற போதிலும் பெரிய முன்னனேற்றம் ஏற்பட்டதாக காணப்பட வில்லை. ஆனாலும் காத்தான்குடியை அன்மித்த பிரதேசங்களான பாலமுனை காங்கேயனோடை மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் இராஜாங்க அமைச்சருக்கான வாக்கு வங்கியில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

 

 

 

 

 

 

ஏனெனில் இராஜாங்க அமைச்சரினால் நிறுத்தப்பட்ட காங்கேயனோடை பாலமுனை மஞ்சந்தொடுவாய் வட்டாரங்களுக்கான வேட்பாளர்கள் வெற்றிபெற்றதையும் இங்கு குறிப்பிடமுடியும். இவர்கள் பெற்ற மொத்த வாக்குகளும் இராஜாங்க அமைச்சரின் ஆதரவு தளம் சற்று அதிகரித்துள்ளது என்பதையே காட்டுகின்றது.
ஆனாலும் காத்தான்குடியில் கடந்த 1989ம் ஆண்டு 1994ம் ஆண்டு தேர்தலை விடுத்து ஏனைய அத்தனை தேர்தல்களும் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் வரை இராஜாங்க அமைச்சரின் வாக்குகள் குறைந்து வருவதையே காணக் கூடியதாக உள்ளது.

இந்த தேர்தலில் கூட காத்தான்குடியில் மொத்தமாக 11835 வாக்குகள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளதையும் காணக் கூடியதாக உள்ளது.

அதே போன்று புதிதாக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கா தேசிய முன்னணியின் வாக்குகளும் இந்த தேர்தலில் வெகுவாக குறைவடைந்துள்ளன.
2011ம் ஆண்டு காத்தான்குடி நகர சபை தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சுயேட்சையாக போட்டியிட்டு 6809 வாக்குகளைப் பெற்றிருந்தது.

இந்த தேர்தலில் அரசியல் கட்சியாக அவர்களது தனித்துவமான சின்னத்தில் போட்டியிட்டு 5815 வாக்;குகளைப் பெற்றுள்ளது.

இது அவர்களது வாக்கு வங்கியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை காட்டுவதுடன் இவர்களது வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இதே போன்று அன்றைய காத்தான்குடி நகர சபை தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1429 வாக்குகளை பெற்றிருந்தது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் தலைமையில் களமிறங்கிய இந்த தேர்தலில் 4633 வாக்குகளை பெற்றுள்ளது. இது சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சி என்பதை விட பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் தனிப்பட்ட செல்வாக்குக்கான வாக்காகும் என பலரும் கூறுகின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றியாருக்கு?

முதல் வெற்றி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்காகும்.

இராஜாங்க அமைச்சர் தனது செல்வாக்கு தளத்தினை தனது சொந்த ஊரான காததான்குடியில் உறுதிப்படுத்தி தேசிய மட்டத்திலும் தேசிய அரசியலிலும் மேலும் தனது செல்வாக்கை காட்டியுள்ளார்.

இரண்டாவது வெற்றி கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்குக்கு கிடைத்த வெற்றியாகும்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த பொறியியலாளர் சிப்லி பாறூக் கடந்த இரண்டு வருடங்களாக தான் ஒரு தனித்துவமான அரசியல் வாதியாக செயற்பட்டு 4633 வாக்குகளை பெற்றுள்ளார்.

இதில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் அபிமானிகளின் வாக்குகள் அடங்கியிருந்தாலும் தனிப்பட்ட சிப்லி என்ற நபருக்கு கிடைத்த வாக்குகளாகவே இதை பார்க்கின்றனர்.
இது அவரின் அனுகு முறைக்கு கிடைத்த வெற்றியாகும் என பலரும் கூறுவதை கேட்க கூடியதாக உள்ளது.

அப்துர் ரஊப் மௌலவி தரப்பு கடந்த நகர சபை தேர்தலை போன்று இந்த தேர்தலிலும் தமது ஆதரவினை தக்கவைத்துள்ளதையும் காணமுடிகின்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வாக்குகள் குறைந்தமைக்கான காரணம் என்ன?
இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தமை

விமர்சன அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்தமை

தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்கப்பிரச்சினையை கூடுதலாக பேசியமை

தமது பிரச்சாரங்கள் சாதரண பாமர மக்களை சென்றடையாமை

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் அபிவிருத்திப் பணிகளை செய்ய முடியாது என மக்களின் மனோ நிலை காணப்பட்டமை

பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டமை

பிரச்சார மேடைகளில் கொள்கைளை கூறுவதை விட விமர்சனங்களுக்கு பதிலளிப்பதிலும் கூடுதல் அக்கறை காட்டியமை

தேர்தல் விஞ்ஞாபன மட்டு மன்றி நவீன தொழி நுட்ப முறைகளை கையாண்டு அவர்களின் தகுதிக் கேற்ற வகையில் கொள்கைகளை நடைமுறை உதாரணங்களுடன் வெளிப்படுத்தாமை.

எது எப்படியிருந்த போதிலும் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நமதூர் பெற்றுக் கொள்வதில் கேள்விக்குறியே ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.