ஆய்வு :  ஓடிப்போன ஒரு முஸ்லிம் பெண் அவள் உறவினரல்லாத ஆட்களை ஒளிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி செய்யும் திருமணம் கூடுமா?

· · 580 Views

 ஓடிப்போன ஒரு முஸ்லிம் பெண் அவள் உறவினரல்லாத ஆட்களை வலிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி செய்யும் திருமணம் கூடுமா?

Q. 5. ஒரு முஸ்லிம் பெண் ஓடிப் போய் அவள் உறவினரல்லாத ஆட்களை வலிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி திருமணம் முடித்தால் அந்த திருமணம் செல்லுமா..?

அவர்கள் உறவுக் கொண்டதாக கூறினால் தண்டனை வழங்க வேண்டுமா..? அல்லது அவர்களை பிரித்து வைக்க வேண்டுமா..?

பதில் : திருமணம் என்பது ஒரு சந்தைக்கடை விஷயமல்ல அது ஒரு நல்ல பாரம்பரியத்தையும் குடும்ப அமைப்பiயும் நெடிய உறவு முறைகளையும் உருவாக்கும் ஒரு காரியம் என்பதால் இஸ்லாம் இதில் மிகுந்த அக்கரை செலுத்தியுள்ளது. ஆண் பெண்ணுக்குறிய இயல்புகளை கருதி திருமண விஷயத்தில் தன் சட்டங்களை வரையறுத்துள்ளது. அப்படி வரையறுக்கப்பட்ட சட்டங்களில் ஒரு முஸ்லிம் பெண் பொறுப்புதாரர்களோ சாட்சிகளோயின்றி தான் திருமணம் செய்துக் கொள்வதற்கு தடையுள்ளது. – வலியின்றி (எந்தப் பெண்ணுக்கும்) திருமணமில்லை – என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி அபூ மூஸா, அபூ ஹுரைரா, இப்னுஅப்பாஸ், அனஸ், ஆய்ஷா போன்ற நபித்தோழர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (திர்மிதி 1107 வது ஹதீஸ்)இங்கு வலியென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டுள்ளது யாரைக்குறிக்கும்..?

அந்தப் பெண்ணின் பாதுகாவலர் மற்றும் பொறுப்புதாரிகளைக் குறிக்கும்.வலி என்ற வார்த்தையின் கணத்தை நாம் விளங்கினால் எவர் வேண்டுமானாலும் வலியாகி விடலாம் என்ற வாதம் தவறு, அப்படி தீர்மாணிக்க முடியாது என்பதை விளங்கலாம். திருமணம் முடிப்பதாக இருந்தால் முஸ்லிம் பெண்ணுக்கு பொறுப்புதாரி அவசியம். இது அவள் மீது அக்கரை செலுத்தக்கூடிய ஆண் சொந்தங்களையே குறிக்கும். வலி என்பது ஒரு பெண் அவளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை குறிக்காது. அவள் மீது இறைவன் ஏற்படுத்தின உறவைக் குறிக்கும்.

ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

One comment

  1. “வலி” இல்லாமலும் திருமணம் செய்யலாம், பெண் தான் விரும்பிய யாரையும் வலியாக நியமிக்கலாம் என்று ஹனவி மதஹப் கூறுவதாக கூறப்படுகின்றது. ஆகவே இந்த வலி விடயத்தில் அதன் உள்ளார்ந்த நோக்கத்தை பார்ப்பது அவசியம் என்று நினைக்கின்றேன். இதை சற்று ஆராய்ந்துபார்க்கும்படி நிஜாமுத்தீனை தயவாய் வேண்டுகிறேன்..

Leave a Reply

Your email address will not be published.