ஆயுதமாவது மண்ணாங்கட்டியாவது : ஹிஸ்புல்லாஹ்வின் ஊர் 9 வயது சிறுவன் கல் சுமக்கும் கேவலம் !! இதை நிறுத்தட்டும் முதலில்

· · 844 Views

கல்குடா ஓட்டமாவடி, காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலையத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் பாஹிர் எனப்படும் சிறுவன் கொழுத்தும் வெயிலில் இயந்திர டெக்டரின் மீது பயணித்து பத்து கிலோ பாரமுடைய சீமந்து கற்களை ஏற்றி இறக்கும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளமையானது மிகவும் மனவேதனை அளிக்க கூடிய விடயமாகவும், சிறுவர்களினுடைய உரிமைகளை மீறி நடக்கும் செயலாகவும் இன்று (14.12.2016) ஓட்டமாவடி பழைய சேர்மன் வீதியில் கவணிக்க கூடியதாக இருந்தது.

குறித்த விடயம் சம்பந்தமாக அச்சிறுவனிடம் வினவிய பொழுது தான் ஓட்டமாவடி காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலையத்தில் நான்காம் ஆண்டில் கல்வி பயிலுவதாகவும், தனது வகுப்பிற்கு பாயிஸ் எனப்படும் ஆசிரியர் வகுப்பாசிரியராக கடமையாற்றுவதாகவும், தான் காவத்தமுனையில் வசிக்கின்ற ஹம்ஸாவினுடை மகன் என்றும், மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் தான் இறுதியானவன் எனவும் தெரியப்படுத்தினார்.

மேலும் குறித்த டெக்டர் இயந்திர உரிமையாளர் கை உறைகள் அணிந்து வேலை செய்யும் அதே நேரத்தில் குறித்த பாஹிர் எனப்படும் மாணவன் பாதனிகள் கூட இல்லாமல் கொழுத்தும் வெயிலில் வேலைக்கு அமர்தப்பட்டிருப்பதானது நல்லாட்சி இடம் பெறுகின்ற இந்த நாட்டில் சிறுவர்களின் உரிமைகள் முற்றாக மீறப்படும் செயலாகவே பார்க்கப்படும் விடயமாக உள்ளது.

அத்துடன் டெக்டர் உரிமையாளர் சிறுவனிடம் எதையோ மறைத்து கூறுமாறு பணிப்பதனை இங்கு ஆதாரத்திற்காக பதிவேற்றியுள்ள காணொளியினை உற்று நோக்குமிடத்தில் தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.

chil

இது சமபந்தமாக டெக்டர் உரிமையாளரிடம் வினவிய பொழுது குறித்த பாஹிர் எனப்படும் சிறுவன் தனது மகன் இல்லை என்றும், சிறுவன் தந்தையுடனே முச்சக்கர வண்டியில் வந்து தனது டெக்டரில் ஏறி வேலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆகவே காவத்துமுனை அல்-அமீன் வித்தியாலையத்தின் அதிபர் பிர்தெளஸ் மற்றும் மாணவனின் வகுப்பாசிரியரான பாயிஸ் ஆசிரியர், பாடசாலை நிருவாகம் என்பன இச்சிறுவனின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரான ஹாசிம் மெளலவி, சிறுவர் அமைப்புக்கள், சிறுவர் நன் நடத்தை அமைப்பு, குறித்த பிரதேசத்தின் கிராம சேவக உத்தியோகத்தர், குறித்த கிராமத்தின் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, சமூக அமைப்புக்கள் என்பவற்றின் கவனத்திற்கு குறித்த சிறுவனுடைய பிரச்சனையினை கொண்டு வருகின்றோம்.

(இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் தந்தையை கண்மூடித்தனமாய் குற்றம் சுமத்துவதை தவிர்த்து, இச்சிறுவனின் குடும்ப சூழ்நிலை மற்றும் இச்சிறுவனின் எதிர்காலம் என்பவற்றை  கல்குடா சமுகம் கருத்தில் எடுத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு தயவாய் வேண்டுகின்றோம்.)

Leave a Reply

Your email address will not be published.