ஆனமடுவ மதீனா ஹோட்டலுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு – காவலுக்கு இருந்த 4 பொலீசார் இடை நிறுத்தம்..?

· · 308 Views

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் உணவகம் ஒன்றுக்கு இன்று தீ வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.முஸ்லிம் வர்தகர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்தின் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்வில்லை என்பதுடன், சேத விபரங்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

 

 

 

இதே வேளை, குறிப்பிட்ட  கடைக்கு  நான்கு போலிசார் காவலுக்கு இருந்தும் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த நால்வரும்  ஒப்பமிடுவதற்க்காக அந்த இடத்தில் இருந்தும் அகன்றிருந்தாக  செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தற்போது அந்த நான்கு பொலீசாரும் உடனடியாக வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பத்திரிகை வட்டாரச் செய்திகள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published.