ஆனமடுவ மக்களின் கோரிக்கைக்கு இணங்கியே பதவி விலகினேன்..!! பிரியங்கர கூறுகிறார்

· · 1039 Views

மக்களின் அதிருப்தி காரணமாக பதவியை துறக்க நேரிட்டது என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

பதவியை ராஜினாமா செய்தமை குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

priyankarajayaratne11222010

நாட்டின் அரசியல் நிலைமை அவ்வளவு சாதகமானதாக இல்லை. மக்களின் மத்தியில் அதிருப்தி நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலின் பின்னர் ஆணமடுவ பிரதேசத்தில் ஏற்படக்கூடிய பதற்ற நிலையை தடுக்கும் நோக்கிலும் ஆணமடுவ பிரதேச சுத்நதிரக் கட்சியின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமையவும் நான் அரசாங்கத்தில் இணைந்து கொண்டேன்.

எனினும் அவர்களினால் நாம் பதவி பெற்றுக்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுகின்றார்கள். இந்தக் கதை பிழையானது எம்மாலேயே அவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள்.

இந்த அரசாங்கத்தில் பதவி வகித்தது போதும் உடனடியாக விலகுமாறு ஆணமடுவ மக்கள் கோரினார்கள். எனது ஊரின் விஹாராதிபதியும் மக்களும் பதவியை துறக்குமாறு கோரியிருந்தனர்.

நான் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராவேன். நாம் மக்களின் கோரிக்கைகளை செவி மடுக்க வேண்டும். வற் வரி குறித்த வாக்கெடுப்பின் போதும் நான் வாக்களிக்கவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மீளவும் அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என நான் நம்புகின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் ஆணமடுவ பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை, நாம் கட்சியை விட்டு விலகப் போவதில்லை கட்சியை கைவிடப் போவதும் இல்லை என பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.