ஆனந்த தேரருக்கு எதிராக ரங்கே பண்டார வண்ணாத்திவில்லு போலிசில் முறைப்பாடு – ரங்கேயின் மர பிசினஸை வெளியில் கொண்டு வந்தாரா தேரர்..?

· · 357 Views

பாலித ரங்கே பண்டாரவுக்கும் மலிக் சமரவிக்ரமவுக்கும் அரச வனங்களிலுள்ள மரங்கள் டொலர்களாகவே தென்படுவதாகவும், இதுவே இந்த அரசாங்கத்தின் பச்சை வீட்டுச் சிந்தனை எனவும் தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.

 

 

வில்பத்து தேசிய வனப் பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பாலித ரங்கே பண்டார மீது ஆனந்த சாகர தேரர் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.

 

இந்த நாட்டின் பிரதமர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாம் ஒரு வேண்டுகொளை விடுக்கின்றோம். இந்த பாலித ரங்கே பண்டாரவை உடனடியாக இழுத்து வந்து அலரி மாளிகையில் எங்காவது ஒரு மூலையில் கட்டிப்போடுங்கள்.

 

 

பாலித ரங்கே பண்டார வில்பத்து காடழிப்பில் நேரடியாக தொடர்புபட்டுள்ளார். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்த சாகர தேரர், ஜனாதிபதி வில்பத்து பிரச்சினை தொடர்பில் எடுத்துள்ள முன்னெடுப்புக்களை பாராட்டுவதாகவும் கூறினார்.

 

 

 

இதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டு தனிப்பட்ட நபர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையில் சில தேரர்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இவ்வாறான தேரர்கள் கொழும்பிலுள்ள சுக போக வீடுகளில் இருந்து கொண்டு, அதி பெருமதி மிக்க வாகனங்களில் பயணித்துக் கொண்டு சில என்.ஜி.ஓ. காரர்களுக்கு கூலி வேலை பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எமது விகாரையிலுள்ள பௌத்த தேரர்களுக்கு மிதிவண்டியொன்று கூட இல்லாதிருக்கின்றனர்.

 

 

இவ்வாறானவர்களில் ஆனந்த சாகர தேரரும் முக்கியமான ஒருவர். மக்களுக்கு வாழ்வதற்கு வீடு இல்லை. இவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் போது இது போன்றவர்கள் பொய்யாக கூக்குரல் இடுகின்றனர். இவ்வாறான தேரர்கள் தெஹிவளையில் அதிசுகபோக விடுகளை நிர்மாணித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

 

 

 

வில்பத்து தேசிய வனப் பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பாலித ரங்கே பண்டார மீது ஆனந்த சாகர தேரர் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

 

 

 

தேரரின் இக்குற்றச்சாட்டு தொடர்பில் வனாதவில்லு பொலிஸ் நிலையத்தில் அமைச்சர் பாலித ரங்கேபண்டார நேற்று முன்தினம்  முறைப்பாடொன்றையும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.