ஆசியாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக சிரியாவின் ஓமர் கர்பின் தெரிவு !! 23 வயது

· · 292 Views

ஆசியாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது சிரியாவின் ஓமர் கர்பினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்ட கூட்டு சம்மேளன விருது வழங்கல் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

 

 

 

 

 

இதன் மூலம் இந்த விருதிற்குப் பாத்திரமான முதலாவது சிரிய வீரர் என்ற சிறப்பை 23 வயதான ஓமர் கர்பின் பெற்றார்.

 

 

ஆசிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் வெளிப்படுத்திய ஆற்றல்கள் மூலம் ஓமர் கர்பின் இந்த விருதிற்குப் பாத்திரமாகியுள்ளார்.

 

 

ஆசியாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனை விருது அவுஸ்திரேலியாவின் சமந்தா கெர்ருக்குக் கிட்டியுள்ளது.

 

 

அவர் கழக மட்டத்தில் அவுஸ்திரேலியாவின் பேர்த் குளோரி மற்றும் அமெரிக்காவின் ஸ்கை ப்ளூ ஆகிய கழகங்களுக்காக விளையாடி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.