அஷ்ரப் 16 :பிரம்மாண்ட அஷ்ரப் நினவு தின நிகழ்ச்ச்சியில் கட்சியின் தியாகிகள் ஓரங்கட்டப்பட்டு இரண்டாம் மட்ட தலைமைகள் மேடையில் !! சிறப்பான விழா

· · 623 Views

சுதந்திர இலங்கை தேசத்தில் முகவரியற்று இருந்தவர்களின் முகவரியாய் முளைத்த நமது மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அகால மரணமடைந்த செப்டம்பர் பதினாறாம் திகதியை முன்னிட்டு நேற்று(2016-09-16) அழகிய தொனியில் அல்குர்ஆன் எனும் தொனிப்பொருளிலான கிராஅத் நிகழ்ச்சியும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் வெகு விமர்சையாக தாமரைத்தடாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதற்கட்டமாக சென்ற மாதம் இறுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாக ஏற்பாடு செய்த கிறாஅத் ஓதும் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களின் கிராத் நிகழ்வு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து இறைவனின் அழகிய திரு நாமங்களான அஸ்மாஉல் ஹூஸ்னாவை அழகிய கஸீதாவாக அவைக்கு ஆற்றுப்படுத்தம் நிகழ்ச்சியும் மேடையேற்றப்பட்டது.

பின்னர் மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து நெலும்பொக்குண கலா மண்டபத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே தொழுகை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் அரங்கமாக மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 16ஆவது நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூபு; ஹக்கீம் வரவேற்புரையை ஆற்றினார்.

ha-3-jpg2_-3

பின்னர் கடந்த மாத இறுதியில் தாருஸ்ஸலாத்தில் நடத்திய கிராஅத் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அஷ்ரஃப் ஞாபகார்த்த நிகழ்வுச் சொற்பொழிவை கட்டார் பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பிரிவு பேராசிரியர் தீன் முஹம்மத் அவர்கள் ஆற்றினார். சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றுள்ள பேராசிரியர் தீன் முஹம்மத் அவர்கள் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி, நடந்து முடிந்த கிறாஅத் போட்டிகளின் ஆவணத் தொகுப்பான அழகிய முறையில் அதி நவீன நுட்பங்களுடன் கலைத்துவமாகத் தயாரிக்கப்பட்ட குறும்படக் காட்சி ஒன்றும், ‘எங்கள் ஸ்தாபத் தலைவர்’ எனும் தலைப்பிலான ஆவணப் படம் ஒன்றும் அரங்கில் அவையில் காட்சிப்படுத்தப்படட்து.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உயர்ஸ்தானிகர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச காரிகள் என பலரும் கலலந்துகொண்டனர்.

ha

ha-jpg2

ha-jpg2-jpg3

ha-jpg2-jpg6

ha-jpg2-jpg8ha-jpg2-jpg9

ha-jpg2-jpg22

ha-jpg2-jpg66

ha-jpg2-jpg77

ha-jpg2-jpg666

ha-jpg55

ha1111

Leave a Reply

Your email address will not be published.