அவதூறு : அமைச்சர் ரிஷாத்தை அவமானப்படுத்தியவர் புத்தளத்தில் அடையாளம் காணப்பட்டார்..!! சப்றான் பற்றிய செய்தி

· · 5601 Views

எஸ்.ஆர்.எம்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக புத்தளம் நகரத்தில் வைத்து கஜ்ஜா பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலையிட்டு அந்த நபரைவிடுவித்தாகவும்,காப்பாற்றப்பட்ட நபரை இரவோடு இரவாக வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைதத்தாக தெரிவித்த வெளியான செய்தி தொடர்பில் பேஷ்புக் மூலம் சிலர் மேற்கொண்டுவந்த போலிப்பிரசாரத்ததின் சூத்திரதாரிகளில் ஒருவர் புத்தளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

risath-stf-2

மேற்படி செய்தியில் பெயர் குறிப்பிடப்பட்டு இடம் பெறாத ஒரு சம்பவத்தை இடம் பெற்றதாகவும்,அதற்கு பொலீஸாரினை தொடர்புபடுத்தி இந்த செய்தியினை புத்தளத்தை சேர்ந்த பதவி நிலையொன்றில் இருக்கும் அரச ஊழியர் ஒருவரினால் வாட்ஸ் அப் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பிரஸ்தாப நபரை தொடர்பு கொண்டு கேட்ட அமைச்சர் றிசாத் பதயுதீனின் இணைப்பு செயலாளரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லாவிடம் தவறுதலாக தன்னால் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும்,இதற்கு பதிலீடாக இவ்வாறான சம்பவம் தொடர்பில் தன்னால் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த செய்திக்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்..

மேற்படி செய்தி பிழையென்றும் தான் இதனை உறுதிப்படுத்த எந்த ஆதாரங்களும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி அறிக்கையொன்றினை வெளியிடுமாறு இர்ஷாத் றஹ்மத்துல்லா வேண்டியிருந்தும், அது இன்று வரை இடம் பெறவில்லை.ஏன் இது இடம் பெறவில்லை என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்த போது இந்த செய்தி உருவாக்கத்தின் பின்னணி யார் என்பது தொடர்பில் சில தகவல்களை பிரஸ்தாப ஊழியர் தெரிவித்திருந்தார்.

இதில் தொடர்புபடுத்தப்பட்டிருந்த நபரான முஹம்மத் சப்ரான் என்பவர் இர்ஷாத் றஹ்மத்துல்லாவின்  மகளை திருமணம் செய்த முஹம்மத் சப்ரான் என்பவராவார். உறவு முறைப்படி இர்ஷாத் றஹ்மத்துல்லாவின் மருமகனாவார்.

இந்த நிலையில் அமைச்சர் றிசாதை சமூகத்தில் பிழையான தோற்றத்தினை தோற்றுவிக்கும் வகையில் பொறுப்பற்ற சொற்களால் அவதுாறுகளை இட்டுக்கட்டி அந்த செய்தியினை வெளியிட்டதுமட்டுமல்லாமல்,பொலீஸாரின் தடுப்பில் இருந்த நபரையும் அமைச்சர் விடுவித்ததாகவும் படுமோசமான முறையில் இந்த செய்தியி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

பிரஸ்தாப செய்தியினை தாம் இணைந்துள்ள வட்ஸ்அப் குழுமத்தில் பதிவேற்றம் செய்த நபரின் அந்த செய்தியின் மேல் மூலையில் பதிவேற்றம் செய்தவரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன காணப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பு கொண்ட போது, இது பதிவேற்றம் செய்யப்பட்டது தவறானது என்று கூறியுள்ளார்.

இருந்த போதும் முஹம்மத் சப்ரானின் உறவினர்கள் பொலீஸாரின் கவனத்திற்கு இதனை கொண்டுவந்த போதும், புத்தளம் சமூகத்தின் பெயரை களங்கப்படுத்த சிலர் எடுக்கும் சதி குறித்து கண்டறிந்ததும்,பதிவேற்றம் செய்த நபர் இந்த செய்தியினை தனக்கு அனுப்பியவர் கட்டார் நாட்டில் தொழில் புரியும் புத்தளத்தை சேர்ந்த நபரென அவரது கையடக்க தொலைபேசியினையும் வழங்கியுள்ளார்.

இவ்வாறான நிலையில் இவட்வாறான சின்னத்தனமான பொறுப்பற்ற செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகத்தின்  அரசியல் தலைவர்கள் தொடர்பில் பிழையான பொய்யான தரவுகைள சர்வதேசதத்திற்கு கொடுக்கும் பணியினை செய்யும் ஊர் பற்றற்ற பணமே வாழ்க்கை என வாழும் பிணந்தின்னிகளிடம் இவ்வாறான செயற்பாடுகள் காணப்படுகின்றன.

அதே வேளை இந்த செய்தியினை வடிவமைத்தவர் யார் என்பது தொடர்பில் சில தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ள நிலையில் மிகவிரைவில் சட்ட நடவடிக்கை மூலம் இதனை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இவ்வாறான செய்தியினை பதிவேற்றம் செய்ய அதற்கு துணைபோனவர்கள் தொடர்பிலான முழுமையான ஆதாரங்கள் வெகுவிரைவில் பெறப்படும் என்றும் அவர்கள் தொடர்பில் தகவல் வெகு விரைவில் வெளியிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதுடன் ,தனிமனிதரது, சமூகத்தலைவர்களை அவமானப்படுத்தும் மோசமான இந்த வேலைகளுக்கு சட்டத்தின் உரிய நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதையும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

 

Leave a Reply

Your email address will not be published.