அழகான ராட்ஷசியே : சவூதி மன்னர் சல்மானின் மகள் ஹஸ்ஸா பின் சல்மானைக் கைது செய்ய உத்தரவு !!

· · 1900 Views
விட்டை ரிப்பேர் செய்ய வந்த பணியாளரை தனது பாதுகாவலரை விட்டு அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்காக சவுதி இளவரசரான Mohammed bin Salmanஇன் சகோதரியான இளவரசி Hassa bint Salman (40)க்கு பிரான்ஸ் அரசு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
 
பாரீஸிலுள்ள Avenue Foch என்னும் தெருவிலிருக்கும் சவுதி இளவரசியின் வீட்டுக்கு வேலை செய்ய வந்த பணியாளர் ஒருவர் அந்த வீட்டைப் புகைப்படம் எடுத்துள்ளார்.
 
இதனால் கோபமடைந்த இளவரசி தனது பாதுகாவலரை அழைத்து “அந்த நாயைக் கொல்லு, அவனுக்கெல்லாம் வாழத்தகுதியே இல்லை” என்று கத்தியிருக்கிறார்.
 
பாதுகாவலரும் அந்தப் பணியாளரின் கைகளைக் கட்டி, முகத்தில் குத்தி, இளவரசியின் கால்களை முத்தமிடச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்.
 
நீண்ட நேர அடி உதைக்குப் பின் பணியாளர் பணிசெய்வதற்குப் பயன்படுத்தும் கருவிகளைப் பிடுங்கி விட்டு அவரை துரத்தியிருக்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவருக்கு 8 நாட்கள் மருத்துவ ஓய்வு வழங்கப்பட்டது. அவரை அடித்துத் துன்புறுத்திய பதுகாவலர் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் பணியாளரை அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்காக சவுதி மன்னரின் மகளான இளவரசி Hassa bint Salmanக்கு பிரான்ஸ் நீதிபதி ஒருவர் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
 

Leave a Reply

Your email address will not be published.