அளுத்கம விடயத்தில் நீதி­ய­மைச்சர் என்ற வகையில் நீங்கள் எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன? எதிர்க்கட்சித் தலைவர் ஹக்கீமிடம் கிடிக்கிப்பிடி கேள்வி !!

· · 180 Views

agama2

அளுத்­கம, பேரு­வளை வன்­முறைச் சம்­ப­வங்­களின் போது கொல்­லப்­பட்­ட­வர்கள் தொடர்­பான மரண விசா­ரணை அறிக்­கை­க­ளுக்கும் கண்­கண்ட சாட்­சி­யங்­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் இருப்­பதால்இவ்­வி­வகாரம் பாரிய சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளது என எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் போது எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்டில் அளுத்­கம சம்­பவம் தொடர்பில் கேள்­வி­யொன்றை எழுப்­பியே மேற் கண்­ட­வாறு சந்­தேகம் வெளி­யிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறு­கையில்,

அளுத்­கம மற்றும் பேரு­வளை பகு­தி­களில் இடம் பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் வெலிப்­பிட்­டிய பிர­தே­சத்தில் இருவர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேற்­படி இரு உயி­ரி­ழப்­புக்­களும் துப்­பாக்­கிச்­சூட்­டி­னா­லேயே ஏற்­பட்­டுள்­ள­தாக நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். இருந்த போதிலும் வெட்­டுக்­கா­யங்கள் கார­ண­மா­கவே இந்த மர­ணங்கள் சம்­ப­வித்­தி­ருப்­ப­தாக மரண விசா­ரணை அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. இது ஒன்­றுடன் ஒன்று முரண்­பட்டு காணப்­ப­டு­கி­றது. அதனால் இதில் பாரிய சந்­தேகம் நில­வு­கின்­றது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி சிலோன் டுடே எனும் ஆங்­கில பத்­தி­ரி­கையில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்­கி­யி­ருக்கும் செவ்­வியின் மூலம் மேற்­படி சந்­தேகம் வலு­வா­கி­யுள்­ளது.

வெலிப்­பிட்­டிய பிர­தே­சத்தில் இருவர் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்­துள்­ளனர். இருப்­பினும் அது தொடர்­பான மர­ண­வி­சா­ரணை உள்­ளிட்ட ஏனைய விசா­ர­ணை­களும் அப்­பட்­ட­மாக இருப்­ப­தா­கவும் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­மைக்­கான சாட்­சியை தம்மால் முன்­வைக்க முடியும் என்றும் மேற்­படி பத்­தி­ரிகை செவ்­வியில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம் கூறு­வது போன்று மரண விசா­ரணை அறிக்­கை­யிலும் பொய்­யு­ரைக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால் அது பார­தூ­ர­மான விட­ய­மாகும்.

மேலும் மேற்­படி கொலைகள் தொடர்பில் இடம் பெற்ற நீதிவான் விசா­ர­ணை­களின் போதும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் பிர­சன்னம் இருக்­க­வில்லை

சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்டோர் தரப்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் தாக்­கு­த­லுக்­குள்­ளான பகு­தி­க­ளுக்கு இர­சா­ய­னப்­ப­குப்­பாய்­வா­ளர்கள் அழைக்­கப்­ப­ட­வில்லை என்ற விட­யத்தை நீதி­மன்­றத்தில் முன்­வைத்­துள்ளார்.

தீ விபத்து இடம் பெற்ற பகு­தி­க­ளுக்கு இர­சா­ய­னப்­ப­குப்­பாய்­வா­ளர்கள் அழைக்­கப்­பட்டு ஆராய்ந்து இயல்­பான ஒன்­றாகும். எனினும் இங்கு இர­சா­ய­னப்­ப­குப்­பாய்­வா­ளர்­களை அழைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அத்­துடன் விசா­ர­ணைக்குத் தேவை­யான தட­யங்­களை இல்­லாது செய்யும் வகையில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட இடங்­களில் சிதை­வுகள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு புனர் நிர்­மாணப் பணி­களும் இடம் பெற்று வரு­கின்­றனர். இதிலும் இரா­ணு­வமே ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் மேற்­படி பகு­தி­களில் சிதை­வு­களை அகற்­று­வ­தற்கும் புனர் நிர்­மா­ணங்­களை மேற்­கொள்­வ­தற்கும் நீதி­மன்றம் தற்­போது தடை விதித்­துள்­ளது. எனினும் வேறு பகு­தி­களில் தட­யங்­களை மறைக்கும் நட­வ­டிக்கை இடம் பெற்று வரு­கி­றது. இதனை இந்த சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கின்றேன்.

எனவே இவ்­வி­டயம் தொடர்பில் நீதி­ய­மைச்சர் என்ற வகையில் நீங்கள் எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன?

மரண விசா­ரணை அறிக்­கையை முறை­யாக தயா­ரிக்கத் தவ­றி­ய­வர்கள் தொடர்பில் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளார்கள்.

நீதி­ய­மைச்சின் கீழ் இயங்கும் அதி­கா­ரிகள் வெளிச் சக்­தி­க­ளுக்கும் அழுத்தங்களுக்கும் உட்பட்டு செயற்படுவது நீதித்துறையின் தரத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என்பதை ஏற்கின்றீர்களா-?

எதிர்காலத்திலும் இத்தகைய நிலை எழாதிருக்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? நீதிவான் விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரசன்னம் தவிர்க்கப்பட்டமைக்கான காரணம் யாது? எனும் கேள்விகளுக்கு நீதியமைச்சரிடமிருந்து பதில்களை எதிர்ப்பார்க்கின்றேன் என்றார்

Leave a Reply

Your email address will not be published.