அளுத்கம சம்பவங்கள் குழுக்களால் திட்டமிட்டு செய்யப்பட்ட கறுப்பு ஜூன் !! ரணில் – எனது கருத்தில் மாற்றமில்லை

· · 285 Views

 

ranil-wick

அளுத்கம மற்றும் பேருவளை கலவரங்களானவை சில குழுக்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ‘கறுப்பு ஜூன்‘ என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த சம்பவங்களினால் சிங்கள பௌத்தர்களுக்கும் பௌத்த குருமார்களுக்கும் பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.

 அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“இன்னும் முடிவில்லாத உறுதியான தீர்வு காணப்படாத அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் தொடர்பாக நாட்டில் பெரும்பாலானோர் பல்வேறு கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். ஒருவர் மற்றையவரை நோக்கி விரல் நீட்டிக் கொண்டு ஒவ்வொரு இனங்களின் மீதும் குற்றஞ்சுமத்திக் கொண்டு இந்த நிலைமைக்கு தீர்வு காண முடியாது.

நான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டது போல இது சில குழுக்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கறுப்பு ஜூனாகும் .இதனால் சிங்கள பௌத்தர்களுக்கும் பௌத்த குருமார்களுக்கும் பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.

சிறு குழுவொன்று அதிகாரம் படைத்தவர்களின் ஆதரவுடன் பரப்பிய குரோதத்தின் தீச்சுவாலையினால் பல்வேறு இனக்குழுமங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்களின் புகழ் சீரழிந்து போயுள்ளது. அதனால் தான் இதை முஸ்லிம்களுக்கு எதிராக மூட்டப்பட்ட தீ மட்டுமல்லாது,  சிங்கள பௌத்தர்களுக்கும் எதிராக மூட்டப்பட்ட தீயாக நான் குறிப்பிடுகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published.