அளுத்கம கலவரம் : மரணமானவர்களுக்கு 20 லட்சம்…காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் – பெயர் விபரங்கள் உள்ளே

· · 684 Views

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு, அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

 

 

குறித்த கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

 

 

 

அதனடிப்படையில் கலவரத்தில் மரணமடைந்தவர்களான ராஸிக் மொஹமட் ஜெய்ரான், மொஹமட் சிராஸ் மற்றும் சிவலிங்கம் ஆகியோரது குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

 

 

அதேவேளை, கலவரத்தில் காயமடைந்தவர்களான எம்.எவ்.எம். நிஸாம், மொஹமட் அப்கர், எம்.ஆர்.எம். அஸ்ஜத், எம்.என்.எம். நவாஸ், பாத்திமா சாமிலா, ரியாஸ் அப்துல்லாஹ், அகமட் யுஸ்ரி, முஸ்தபா அஹமட், மிர்பத் அஹமட், சாபித் அஹமட், ஜானசிறி மற்றும் சரத் சிறிவர்தன ஆகியோருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படவுள்ளன.

 

 

 

 

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.