அல்காசிமி சிட்டி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தின் ஸ்போர்ட்ஸ் மீட் !!றிஷாத் எப்சென்ட் – ரிப்கான் பதியுதீன் பிரசன்ட்

· · 338 Views
புத்தளம் அல்காசிமி சிட்டி, மன்/ புத்தளம் ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்றது.

 

 

பாடசாலை அதிபர் எம்.எம்.நஜ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
அத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

 

 

By : lanka reuters

Leave a Reply

Your email address will not be published.