அலிபாபா : நுரைச்சோலை அனல் மின் நிலைய தரகுப் பணமாக 25 கோடியை பெற்ற அளுத்கமகே..!! F.C.I.D. நீதிமன்றில் தகவல்

· · 1450 Views

மகிந்தானந்த அளுத்கமகே கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது மோசடியாக ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்துள்ள சொத்துக்கள் குறித்த முழுமையான விபரங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது. இந்தத் தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.

 

 

 

மகிந்தானந்த அளுத்கமகே, மின்வலு, எரிசக்தி பிரதியமைச்சராக இருந்தபோது, நுரைச்சோலை மின்நிலையத்தை ஸ்தாபித்த சீன நிறுவனமான CMEC என்ற நிறுவனத்திடமிருந்து 25.40 மில்லியன் ரூபாவை தரகுப் பணமாக பெற்று சிங்கப்பூரில் உள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

 

 

 

 

இதற்கு எதிராக B 224777/15 என்ற இலக்கத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

இந்த பணத்தில் மகிந்தானந்த அளுத்கமகே கொள்வனவுசெய்துள்ள சொத்து விபரங்கள் வருமாறு :
1.நாவல, கொஸ்வத்த, சந்ரா வெத்சிங்க மாவத்தையில் 15/1 என்ற இலக்கத்தில் 33 பேர்ச் காணியுடன் வீடு : பெறுமதி 3.8 கோடி ரூபா

 

 

2. கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா மாவத்தையில் 12 பேர்ச்சுடன் 3 காணித் துண்டுகள் : பெறுமதி 5 கோடி ரூபா

 

 

3. கொழும்பு, கிங்லி வீதியில் 70/3/1 என்ற இலக்கத்தில் மாடி வீடு : பெறுமதி 3 கோடி

 

 

4. பொரல்ல குருப்பு வீதியில் 20 பேர்ச் காணி

 

 

5. கொழும்பு – 8 ரிலியம் ரெய்டன்சீஸ் வீடு

 

 

6. இங்கிலாந்து – லண்டன் நகரில் Flat 04, Blyton House, 19-23, Sydenham Hill, London, SE26 6SH என்ற இலக்கத்தில் அதிசொகுசு மாடி வீடு

 

 

 

இவற்றுக்கு மேலதிகமாக சிங்கப்பூரில் HSBC வங்கிக் கணக்குகளில் 5 லட்சம் அமெரிக்க டொலர் வைப்பு.

 

 

இவை குறித்த முழுமையான விபரங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளது. இவற்றை 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். இந்த வழக்கு 2017ஆம் ஆண்டு நவம்பர் 20, 21ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், பாதீட்டு விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனக் கூறி, அளுத்கமகே வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனால் பிணை வழங்கியோருக்கு நீதிமன்றம் பத்திரம் ஒன்றை அனுப்பியுள்ளது.

 

 

 

 

மகிந்தானந்த அளுத்கமகே என்ற நபர் 1987ஆம் ஆண்டு ‘த பினான்ஸ்” நிறுவனத்தின் கேகாலை கிளை அலுவலகத்தில் கடன் வசூலிக்கும் ஊழியராக பணியாற்றியுள்ளார். இவ்வாறு சாதாரண ஊழியராக பணிபுரிந்த நபர் ஒருவர் 30 வருடங்களில் இவ்வளவு சொத்துக்களை சேகரித்துள்ள தகவல், அவர் அதனை நியாயமாக சம்பாதித்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. ராஜபக்ச ஆட்சியில் இருந்த ஒரு அமைச்சர் இவ்வளவு பெரிய தொகையை மோசடி செய்திருப்பாராயின், ஆட்சி செய்த ராஜபக்ச குடும்பம் எவ்வளவு பெரும் தொகையை மோசடி செய்திருக்கும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

 

 

 

 

சாதாரண பொதுமக்கள் இன்றும் வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். ஆட்சியாளர்கள் கடன்பெற்று, அபிவிருத்தி செய்வதாகக் கூறி, அதனை மோசடி செய்து சொத்து சேர்க்கின்றனர். பெற்ற கடனுக்கான பொதுமக்கள் இன்றும் வரிமூலம் கடனை செலுத்த மாடாய் உழைக்கின்றனர்.

 

 

 

 

இந்த நடைமுறையில் மாற்றம் வேண்டுமாயின், ஊழல்வாதிகளுக்கு எதிராக வாக்களிப்பதே ஒரே வழியாகும்.

Leave a Reply

Your email address will not be published.