“அலன் டொனால்டை”பயிற்றுவிப்பாளராக நியமித்ததை ஏற்க முடியாது !! ராஜினாமா செய்தார் அரவிந்த டி சில்வா

· · 812 Views

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன செயற்குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா விலகவுள்ளார்.

இதற்கான இராஜினாமாக் கடிதத்தையும் அவர் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடம் கையளித்துள்ளதாக ஐ.பி.சி தமிழுக்குத் தெரியவந்துள்ளது.

590dc0219e526-IBCTAMIL

தனிப்பட்ட காரணங்களுக்காகவே அரவிந்த டி சில்வா ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவன செயற்குழுவின் தலைவர் மற்றும் கிறிக்கட் நிறுவன ஆலோசனை குழுவின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடருக்காக ஸ்ரீலங்கா அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கான பயிற்றுவிப்பாளராக முன்னாள் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனால்ட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சம்பவமே அரவிந்த டி சில்வா பதவி விலகக் காரணம் என கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன செயற்குழுவின் தலைவராக இருக்கும் அரவிந்த டி சில்வாவிடம் அலன் டொனால்டுடன் ஒப்பந்தம் செய்துகொள்வது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாதது தொடர்பில்  அவர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இதனையடுத்தே அவர் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.