
அரசியலுக்கு அப்பால் : விஞ்ஞானக் கல்லூரி மதிலுக்காக 15 லட்சம் சொந்தக் காசை கொடுத்தார் அலி சப்ரி..!!வாழ்த்துக்கள்
· · 663 Viewsஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி தனது சொந்த நிதி 15 இலட்சம் ரூபாவை புத்தளம் போல்ஸ் வீதிக்கு இடமாற்றப்பட்வுள்ள புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரிக்கான சுற்று மதில் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்துள்ளார். சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை இடம் பெற்றது.
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்லியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்பிட்டி தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ. எஹியா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட மத்திய குழு உறுப்பினர் எம்.ஏ.எம். இப்லால் ஆகியோர் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டுவதையும் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அதிதிகள் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.