அரசியலுக்கு அப்பால் : மஸ்ஜித் தக்வா மெடிகல் சென்டரில் நோயாளர்கள் ரூபா 50/- க்கு மருத்துவம் செய்யலாம் !! Dr. சிப்ரா M.B.B.S. பிரதம வைத்தியர்

· · 1979 Views

நேற்று திறந்து வைக்கப்பட்ட  மஸ்ஜித் தக்வா மெடிகல் சென்டரில் அனைவரும் பயன்பெறலாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான அலி சபரி ரஹீம் தெரிவித்தார்.

 

 

மாலை  5 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த மருந்தகம் திறந்திருக்கும். இங்கு நடைப்பெறும் மருத்துவ சேவை மற்றும் மருந்துகள் என்பனவற்றுக்காக 50 ரூபா அறவிடப்பட உள்ளது.

 

 

இந்த மினி டிச்பென்சரியின் பிரதான வைத்தியராக நீர்கொழும்பை  சேர்ந்த புத்தளம் தள வைத்தியாசாலையில் பணியாற்றும் Dr. சிப்ரா M.B.B.S. அவர்கள் கடமையாற்றுவார்.

 

 

” நாம் இதனை மேலும் விஸ்தரிப்போம். டிஸ்பென்சரியின் மேல்மாடி தற்போது விஸ்தரிக்கப்படவுள்ளது. இதில் நாம் கன்சல்டேஷன்  சேவைகளை வழங்க உள்ளோம். VP, VOG  Surgeon உற்பட சேவை வழங்க உள்ளோம்.

 

 

 

மருத்துவ பரிசோதனைக்கான ஏற்பாடுகளையும் விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். மருத்துவ பரிசோதனைகள்  அனைத்தும் பாலசூரியாவில் நடைப்பெறும். இதற்க்கான மொத்தக் கட்டணத்தில் 25 வீதத்தை  நாம் பொருப்பெடுப்போம்.

 

 

உதாரணத்திற்கு ரத்தப் பரிசோதனை ஒன்றுக்காக பாலசூரிய நிறுவனம் 1000/- ரூபாய் அறவிடுகிறது எனில் நாம் நோயாளர்களிடம் 750/- மாத்திரமே அறவிடுவோம். மிகுதியை நாம் செலுத்துவோம்.

 

 

இந்தத் திட்டம் எனது மனதில் எப்போதோ உத்தித்தது. தற்போதே இது சாத்தியமாகி இருக்கிறது.எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று ஜனாப்.அலி சப்ரி தெரிவித்தார்.

 

 

புத்தெழில் நியூஸ்

 

புத்தளம் தக்வா மஸ்ஜித் நிர்வாகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட   மஸ்ஜித் தக்வா மெடிகல் சென்டர் திறப்பு விழா  இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெற்றது. புத்தளம் நகர சபை உறுப்பினர் எம்.ஏ.ஆர். அலி சப்ரி  மஸ்ஜித் தக்வா மெடிகல் சென்டர் நாடாவை வெட்டி   திறந்து வைத்தார். மஸ்ஜித் நிர்வாகிகளும் இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

 

 
 
 
 
 
 
 
 
 

2 comments

Leave a Reply

Your email address will not be published.