அரசாங்க செலவில் அவசர இருதய சத்திர சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி..!!

· · 289 Views

அவசர இதய சத்திரசிகிச்சைகளை தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.”’

 

 

 

 

 

இன்று(6) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகசந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 2 இதய சத்திரசிகிச்சைக் கூடங்களின் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதால், இதன் பணிகள் நிறைவடையும் வரை அரச செலவில் தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

 

 

 

 

குறித்த புனரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சத்திரசிகிச்சை நோயாளிகள் ஸ்ரீஜயவர்தனபுர அனுப்பப்படுவதாகவும்,எனினும் சத்திரசிகிச்சை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.