அரசாங்கம் 90/% கடன் அடிப்படையில் வழங்க இருக்கும் புதிய ஓட்டோ இதுதான் !! Details

· · 1028 Views

டுக்-டுக், ஆட்டோ, முச்சக்கர வண்டி, திரிவீலர் உள்ளிட்ட எந்தவொரு பெயரில் தற்போதுள்ள முச்சக்கர வண்டியை அடையாளப்படுத்தலாம். இந்த அனைத்துப் பெயரிலும் உள்ள வாகனத்திற்குப் பதிலாக தற்போது நவீன சிற்றூர்தி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சிற்றூர்தி சுற்றாடலுக்கு ஏற்புடைய மின்னியல் வாகனம் என்பது விசேட அம்சமாகும்.

 

 

 

இதற்கமைய இலங்கையிலுள்ள 15 லட்சம் (1.5 மில்லியன்) முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு இந்த புதிய மின்னியல் வாகனத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூலம் ”என்டர்பிரைசஸ் ஶ்ரீலங்கா” என்று இந்த யோசனைத் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

 

 

10:90 வீத அடிப்படையில் லீசீங் முறையில் இந்த புதிய வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான கடனை வழங்கவும் நிதியமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். இதற்கமைய குறித்த வாகனத்தின் பெறுமதியில் 10 வீதத்தை மாத்திரம் செலுத்தி கொள்வனவு செய்ய முடியும்.

 

 

 

 

இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள முச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு பங்களாதேஷ் போன்ற நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன. இவ்வாறான தேவையுள்ள நாடுகளுக்கு தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்வதற்கும் உரிமையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

 

 

இந்த புதிய டுக்-டுக் சிற்றூர்தித் திட்டம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த சிற்றூர்த்தியின் சாரதிகள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியின் சுற்றுலா வழிகாட்டியாகவும் பயிற்றுவிக்கப்படவுள்ளார்.

 

 

 

சுற்றுலாச் சபையில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் சாரதிகளுக்கு, டுக்-டுக் என்ற விசேட ஸ்டிக்கர் ஒன்றும் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள டுக்-டுக் சிற்றூர்திகள் சுற்றுலாச் சபையின் அங்கீகாரம் பெற்ற, சுற்றுலா வழிகாட்டிகளாக கருதப்படுவர்.

 

 

 

 

இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக இந்தத் திட்டம் கவரும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

2040ஆம் ஆண்டில் இலங்கையில் அனைத்து வாகனங்களும் சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிக்காத, மின்னியல் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் என அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.

One comment

Leave a Reply

Your email address will not be published.