அம்பாறையில் கண்முண்ணே நடந்த கலவரத்தை வேடிக்கைப் பார்த்த பொலீசார்..!! முஸ்லிம்களுக்கு எதிரான காக்கிகளின் வேடிக்கை பார்ப்பு போராட்டம் தொடர்கிறது

· · 863 Views

அம்பாறையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவத்தின் போது பொலிசார் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

 

 

 

நகரில் பதற்ற நிலை ஆரம்பிக்கும் நேரம் வரை ரோந்து கடமையில் இருந்த பொலிசார் கலவரக்காரர்கள் பேரூந்துகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அணிவகுத்து வந்து வர்த்தக நிலையங்களைத் தாக்கத் தொடங்கியதும் தலைமறைவாகியுள்ளனர்.

 

 

 

அத்துடன் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான ​போது அவ்விடத்திலிருந்து பார்வைக்குத் தென்படும் தூரத்தில் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதும் பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தவிர தடுக்க முற்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

 

 

Image result for ampara muslim attacked

 

 

 

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்து அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ராணுவ கட்டளை அதிகாரியை தொடர்பு கொண்டு இராணுவத்தினரையும் களத்தில் இறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் கண்டிப்பான உத்தரவு விடுத்துள்ளார். அதன் பின்னரே பொலிசார் களத்தில் இறங்கி பதற்றத்தைத் தணிக்க முயற்சித்துள்ளனர்.

 

Image result for ampara muslim attacked

 

அதற்குள் கலவரக்காரர்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களையும், வாகனங்களையும் தாக்கி தீயிட்டும், சேதப்படுத்தியும் இருந்தனர். அத்துடன் பள்ளிவாசலும் சேதப்படுத்தப்பட்டு அங்கு தங்கியிருந்தோரும் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

 

 

சட்டம், ஒழுங்கு அமைச்சை தன் கைவசம் வைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பராமுகமாக இருந்த பொலிசார் மீதும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

One comment

Leave a Reply

Your email address will not be published.