அம்பாந்தோட்டையில் ஹாமதுருக்களுக்கும் சேர்த்து அடி விழுந்தது..!! பிரதமர் கல் வைத்தார்

· · 1319 Views

ருஹூனு அபிவிருத்தி வலய அடிக்கல் நாட்டு விழா இடம்பெறும் வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for hambantota protest today

சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை சீனா கைத்தொழில் செயற்றிட்ட நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு வந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிகழ்வினை அங்குரார்ப்பனம் செய்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகைத்தந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ha-1-jpg2_-1

குறித்த வலயத்தை சீனாவுக்கு கையளிக்கக்கூடாது என்று கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எனினும் அரசாங்கம் அந்த திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளது.

மேலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வுகளை குழப்புவதற்கு கற்களை வீசியுள்ளனர்.

இதனால் ஆர்ப்பாட்டகாரர்கள் கூடியிருந்த பகுதியை நோக்கி பொலிஸார், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதில் 3 பொலிஸார் உட்பட்ட 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நிகழ்வு இடம்பெறும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் அதிரடி படை பிரிவினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இன்று ஹம்பாந்தோட்டை வலய பகுதியில் ஆர்ப்பாட்டத்தைமேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதற்ற நிலைமைக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையினால் 21 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்களிடையே மூவர் பொலிஸ் அதிகாரிகள் எனவும் கூறப்படுகின்றது.

ha ha-jpg2

Leave a Reply

Your email address will not be published.