அம்பத்தனையில் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய புத்தளம் ராணுவ முகாமின் கோப்ரல் மீதான ராணுவ விசாரணை ஆரம்பம் !!

· · 1485 Views

எம்.எப்.எம்.பஷீர் –

 

கண்டி மாவட்டமெங்கும் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறைகளின்போது முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள்மீது தாக் குதல் நடத்தி தீ வைத்தமை தொடர்பில் சேவையில் உள்ள இரு இராணுவ கோப்ரல்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரி வினரின் சிறப்புக் குழுவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் இராணுவ பொலிஸார் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவ்விருவரும் கைது செய் யப்பட்டதையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டதாகவும், நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவ்விருவரும் இராணுவ சேவையில் இருந்தே நீக்கப்ப டுவர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

இந் நிலையில், குறித்த இராணுவ வீரர்கள் இரு வரும் நான்கு நாட்களுக்கு மேல் விளக்கமறியலில் இருந்தால் அவ்விருவரினதும் சம்பளங்கள் நிறுத்தப்படும் எனவும், அவர்கள் நிரபரா திகள் என நிரூபணமாகும் வரையில் அவை மீள செலுத் தப்படமாட்டாது எனவும் அவர் மேலும் கூறினார்.

கண்டி பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் அம்பதென்ன பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தீவைப்பு தொடர்பில் இவ் விரு கோப்ரல்களும் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

கஹவத்த, அம்பதென்ன பகுதியை வசிப்பிடமாக கொண்ட இராணுவ கோப்ரல் தர வீரர்களான, 34 வயது டைய புத்தளம், சிங்ஹவில்லு வத்தவில் உள்ள 143 ஆவது படையணி தலைமையகத்தில் சேவையாற்றும் 475030 எனும் இராணுவ இலக்கத்தை உடைய சுபசிங்க முதியன்ச லாகே அனுர பண்டார விஜே சிங்க என்பவர் கைதானவரில் ஒருவராவார்.

 

கைதான மற்றையவர் 38 வயதுடைய, கெக்கிராவ தம்புலுஹல்மில்லவிலுள்ள இயந்திர மற்றும் காலாட் படை ரெஜிமென்ட்டின் பயிற்சிப் பாடசாலையில் சேவையாற்றிய மல்வானே கெதர ஹசித்த விஜேரத்ன ஆவார்.

 

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிகள், தண் டனை சட்டக்கோவையின் கீழ் கைதாகியுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி இதுவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுக்கும் பிரதான விசாரணைகளில் கைதான சந்தேக நபர்கள் 15 பேர் ஆவர்.

 

அதில் ஒரு முன்னாள் இராணுவ வீரரும் உள்ளடங்குகிறார். இந் நிலை யிலேயே நேற்று பயங்கர வாத புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு தற்போது சேவையில் உள்ள இரு இராணுவ வீரர்களைக் கைது செய்துள்ளது.

 

கண்டி இனவாத வன்முறைகள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா , அதன் பதில் பணிப்பாளர் ஜகத் விஷாந்த தலைமையில் விஷேட மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.