அமைச்சர் ரிஷாத் பெரியள்ளிவாசலுக்கு விஜயம்..!! பல்வேறு பிரச்சனைகளைப் பற்றியும் கலந்துரையாடினார்- எப்போதும் பாடும் “அகதி”பாட்டையும் பாடிச் சென்றார்

· · 602 Views

புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகிகள் தலைமையில் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள் ஆகியோர் கௌரவ அமைச்சர் தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களுடனான சந்திப்பை நடாத்தினர்.

 

 

 

புத்தளம் நகரும் நகரை சூழ்ந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் தலையாய பிரச்சினைகள் பலதையும் அவசரமாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய சுகாதாரம் சார்ந்த பல்வேறு அம்சங்களை கௌரவ அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

 

 

 

 

அதிலே, புத்தளம் தள வைத்தியசாலை வெளிக்கள நோயாளிகள் பிரிவுக்கான OPD விசேட உடற்கூற்று வைத்திய நிபுணர் VP ஒருவரின் தேவைப்பாடு தேசிய தலைவருக்கு தெளிவூட்டப்பட்டது.

 

 

 

 

புத்தளம் தள வைத்தியசலைக்கான MASTER PLAN தயாரித்து, அமைச்சர் ராஜித ஊடாக சுமார் 1000 மில்லியன் பெறுமதியான சுகாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவி அவர்களுடைய முயற்சிக்கும் தாம் வலு சேர்ப்பதாக தேசிய தலைவர் உறுதியளித்தார்.

 

 

 

 

 

மருத்துவ சிகிச்சைகளை நமது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கும் புத்தளம் குவைத் வைத்தியசாலையை வளப்படுத்த, தேவையான உரிய வளங்களை கொண்டு நிலையான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அதன் முகாமைத்துவம் முன்வந்தால், அரச மற்றும் அரச சார்பற்ற உதவிகளோடு தாம் மேம்படுத்த தயார் எனவும் அமைச்சர் ரிஷாட் வாக்குறுதியளித்தார்.

 

 

 

 

கௌரவ பா.உ எம்.எச்.எம் நவவி அவட்களது நிதி ஒதுக்கீட்டில் வான் சந்தி முதல் குவைத் வைத்தியசாலை வரையான காபட் பாதை மிகவும பயன் வாய்ந்ததாகவும் முகாமைத்துவத்தின் அங்கத்தவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன், மன்னார் வீதியிலிருந்து குவைத் வைத்தியசாலை செல்லும் பாதையையும் செப்பணிடுமாறும் அமைச்சரின் முன்னால் மாவட்ட அமைப்பாளர் சப்ரியிடம் வேண்டப்பட்டது.

 

 

 

 

டெங்கு மற்றும் இன்னோரென்ன சுகாதார சீர்கேடுகளை சந்திக்கும் நமது மக்களின் வாழ்க்கைத் தரத்ததை உறுதி செய்ய அமைச்சார் பைசர் முஸ்தபா மூலம் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சுமார் 10 மில்லியன் பெறுதியான செலவில் சூழலியல் கற்கை ஒன்றை முன்னெடுப்பதாக தேசிய தலைவர் தாமாக முன்வந்தார்.

 

 

 

 

அத்தோடு, சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக புத்தளம் நகர சபைக்கும் பிரதேச சபைகக்கும் போதுமான டிரக்டர் உள்ளிட்ட வாகன வளங்களை பெற்றுக்கொள்ளவும் வேண்டப்பட்டது. புத்தளம் பிரதேச செயலகத்துக்கும், நகர சபைக்கும் நிரந்தர செயலாளர்களையும் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை நிரந்தரமாக்க கோரியும் தேவைகள் உணர்த்தப்பட்டது.

 

 

 

 

 

 

பெரும்பான்மை இன அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் காரணமாக புத்தளம் மாவட்டத்துக்கு தம்மால் கொண்டு வரப்படும் மக்கள் நல திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகள் தடுத்து திருப்பி அனுப்பப்படும் அவல நிலை மேலோங்கி வருவதாகவும் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தினார்.

 

 

 

 

 

“என்னை ஒரு அகதி அமைச்சராக, அகதிகளின் அமைச்சராக கேவலப்படுத்துகின்ற அற்ப செயல்களை இன்னும் நம் சகோதரர்களும் சேர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள். இருந்த போதும் பிழையான விமர்சனங்களை ஒரு புறம் வைத்துவிட்டே நாம் பயணிக்க வேண்டியுள்ளது” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

இந்த சந்திப்பை தலைமை தாங்கிய பெரியப்பள்ளி தலைவர் ஜனாப் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள், உலமா மின்ஹாஜ் (இஸ்லாஹி), மூத்த ஆசிரியர் நதீர், கிராம சேவகர் ரஸ்மி, ஒமேகா நிறுவனர் நயீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் எஹியா ஆப்தீன்,இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீன் ஆகியோருடன் கட்சியின் இளைய மற்றும் மூத்த பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.