அமைச்சர் ரிஷாதுக்கு வட மாகாண மீள் குடியேற்ற செயலணி மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி  விடயங்கள் தொடர்ப்பான பொறுப்புகளை வழங்கினார் ஜனாதிபதி !!

· · 2465 Views

-சப்னி அஹமட்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வடமாகாண மீள்குடியேற்ற செயலனி மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி  விடயங்கள் தொடர்பான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலிலேயே மேற்படி விடயம் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.இதன்படி வடக்கின் புனர்வாழ்வு விடயங்களும், வன்னி மாவட்ட அபிவிருத்தி விடயங்களும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

குறிப்பாக சென்ற தேர்தல் காலங்களில் வன்னியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் போலி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும், குறித்த முக்கிய நியமனம் அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.