அமைச்சர் ஒருவருக்கு சவூதியில் இருந்து பெரும் நிதி வருகிறது..!! சிங்கள ஊடகம் முஸ்லிம் அமைச்சர் மீது துவேஷம்

· · 644 Views

இலங்கையின் முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு, மத்திய கிழக்கு நாடொன்று இரகசியமாக பாரியளவில் நிதி உதவி அளித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

eth

மத்திய கிழக்கின் பலம் பொருந்திய நாடு ஒன்றே இவ்வாறு இரகசியமாக நிதி உதவி வழங்கி வருகின்றதாக கூறப்படுகின்றது.

குறித்த அரசியல்வாதி மற்றும் அவரது அமைப்புக்களுக்கு இந்த பலம் பொருந்திய நாடு உதவி வழங்கி வருகின்றது.

இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்யவும் அந்த அரசியல்வாதி பிரதிநிதித்துவம் செய்யும் மத அமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்கவும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டமை குறித்து அரசாங்கத்திற்கு எவ்வித தகவல்களும் இதுவரையில் வழங்கப்படவில்லை என சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.