அமைச்சராகிறார் ஆறுமுகம் தொண்டமான்..!! அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பேச்சு வார்த்தை வெற்றி

· · 998 Views

ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

ரோயல் பார்க் வீடமைப்புத் தொகுதியில் இதுகுறித்து மிக முக்கியமான, இறுதிச் சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுக்களில் இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஊவா அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, உள்ளுராட்சி அலுவல்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா பேச்சுக்களில் கலந்துகொண்டுள்ளார். அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்குச் சொந்தமான வீட்டிலேயே இந்த பேச்சுக்கள் நடத்தப்படுவதாக தெரியவருகிறது.

 

 

 

 

 

பேச்சுக்கள் இறுதி வடிவம் பெற்ற பின்னர் இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடவுள்ளது.

 

 

 

 

 

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கு அதிக வாக்குகள் இருக்கும் உள்ளுராட்சி சபைகளில் இ.தொ.கா. சேவல் சின்னத்தில் போட்டியிடும் என்று இ.தொ.கா. தரப்பில் நிபந்தனையொன்று வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

ஏனைய உள்ளுராட்சி மன்றங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் அல்லது ஶ்ரீ.ல.சு.கட்சி தலைமையிலான கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட இ.தொ.கா. தற்போது விருப்பம் வெளியிட்டுள்ளது.

 

 

 

 

 

தொண்டமான் – பைசர் முஸ்தபா ஆகியோர் நீண்டகால நண்பர்கள் என்பதனால் இந்தப் பேச்சுக்கள் வெற்றிபெற பெருமளவு வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது.

 

 

 

 

 

உள்ளுராட்சி சபைத் தேர்தல்களுக்கு முன்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. ஆகியன அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

 

தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தேர்தலுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

 

 

 

 

 

இறுதிப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் பட்சத்தில் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.