அமைச்சரவை தீர்மானப்படி கொழும்பு அலுவலக நேரங்களில் மாற்றம்..!! பத்தரமுல்லை பகுதிகளில் முதலில் அமுலாகும்

· · 632 Views
பாதைகளில் காணப்படுகின்ற அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச அலுவலக நேரங்களை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது.
281982924traffic

இது தொடர்பாக அரச நிர்வாக அமைச்சுடன் பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்தின்படி 03 மாத காலத்திற்கு அந்த பரீட்சார்த்த திட்டத்தை பத்தரமுல்லையை அண்மித்த அரச அமைச்சுக்கள் மற்றும் அலுவலகங்களை மையப்படுத்தி நடைமுறைப்படுத்த உள்ளதாக பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.