அமைச்சரவையில் மாற்றங்கள்…!! ஹக்கீமின் அமைச்சில் மாற்றம்..றிஷாத் முன்னைய அமைச்சில் தொடர்வார்

· · 1658 Views

தற்போதைய தேசிய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையே நேற்று (19) நடைபெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

 

 

 

 

அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நிதி, சட்டம் ஒழுங்கு, நெடுஞ்சாலை, வெளிவிவகாரம், முதலீட்டு ஊக்குவிப்பு, விவசாயம், நகர அபிவிருத்தி, ஊடகம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

ஜனாதிபதிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று மதியம் 12.30 அளவில் பேச்சுவார்த்தையொன்று நடந்துள்ளது. இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எந்தவொரு சூழ்நிலையிலும், ராஜபக்ச தரப்பினருடன் இணக்க அரசியல் ஒன்றை நடத்தும் தேவை தனக்கு இல்லையெனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுடன் பணியாற்றும் போதும் தனக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

இந்தக் கூட்டத்தில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் கருத்திலும் அனைவரும் கவனம் செலுத்தியுள்ளனர். தம்மைத் தெரிவு செய்த மக்களைக் காட்டிக்கொடுக்க முடியாது என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்பட்டுள்ள தடைகளையும், பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

 

 

 

 

 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என ஊடகங்களின் ஊடாக கருத்துக்களைப் பரப்பிய அமைச்சர்கள் சிலரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்றைய பேச்சுவார்த்தையின் போது மௌனமாக இருந்தமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published.