அமெரிக்க – ரஷ்யா நாடுகளின் ராஜதந்திர நெருக்கடியில் ஜனாதிபதி மைத்திரி..!! வல்லரசுகளின் பிடியில் திக்குமுக்காடுகிறார்

· · 367 Views

Law of Extradition என்ற சட்டத்தின் கீழ் நபர் ஒருவரை நாடு கடத்தும் விவகாரம் குறித்து அமெரிக்க, ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள இராஸதந்திர நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளமை குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

 

 

 

பணச் சலவை குற்றச்சாட்டில் அமெரிக்காவின் தேடப்படும் ரஷ்ய பிரஜையான மெனோகீன் என்பவர் தற்போது இலங்கையின் வெலிகம பிரதேசத்தில் வசித்து வருவதாக தெரியவருகிறது. குறித்த நபரைக் கைதுசெய்து நாடு கடத்தும் சட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அமெரிக்காவினால் சில மாதங்களுக்கு முன்னர் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நீதியமைச்சிடம் அமெரிக்கா இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. அமெரிக்க – இலங்கை நாடுகளுக்கிடையே நாடு கடத்தும் ஒப்பந்தம் ஒன்று நடைமுறையில் இருப்பதால் ஒப்பந்தம்படி நடந்துகொள்ள இலங்கை கடமைப்பட்டுள்ளது.

 

 

 

 

இதற்கமைய நீதியமைச்சின் ஆலோசனையின்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் செயல்பட்டுள்ளது. குறித்த நபரைக் கைதுசெய்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 05ஆம் இலக்க நீதிபதி முன்னிலையில் அதிகாரிகள் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன்போது ரஷ்ய பிரஜை மெனோகீன் சார்பாக சட்டத்தரணியொருவர் முன்னிலையாகியுள்ளார். தமது கட்சிக்காரர் மெனோகீன், இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக அடிக்கடி வந்துசெல்வதாகவும், அவர் எந்தவொரு சட்டவிரோத செயலையும் செய்யவில்லை என்றும் நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவித்தார். இவற்றை சட்டத்தரணி நிரூபித்ததால், ரஷ்ய பிரஜை பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன்பின்னர், அமெரிக்காவினால் மெனோகீனைக் கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிசாரின் சிவப்பு பிடியாணையொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிடியாணை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

 

 

 

 

இதுகுறித்து அறிந்துகொண்ட ரஷ்ய அரசாங்கம், மெனோகீனை உடனடியாக ரஷ்யாவிற்கு நாடு கடத்துமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ரஷ்ய பிரஜை குறித்து தேடி அறிய முயற்சித்தபோது, இன்னும் சில தகவல்களும் கிடைத்தன.

 

 

 

 

 

இந்த ரஷ்ய பிரஜை, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்காக பாரிய பங்களிப்புச் செய்தவர் என அந்தத் தகவல்கள் மூலம் அறியக்கிடைத்தது. கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தற்போது பல கோணங்களில் அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில் பணச் சலவைக் குற்றச்சாட்டில் இந்த ரஷ்ய பிரஜைக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினர் வலை விரித்துள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

 

 

எவ்வாறாயினும், நாடு கடத்தும் ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசாங்கம் அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த மீண்டும் முயற்சித்துள்ளது. இதன்போது ரஷ்ய பிரஜையின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்று அதற்கு தடை உத்தரவைப் பெற்றுள்ளார்.

 

 

 

 

இவ்வாறான நிலையில், நாடு கடத்தும் சட்டத்தின் கீழ் குறித்த நபரை வேறொரு நாட்டிற்கு ஒப்படைப்பதா இல்லை என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்நாட்டு ஜனாதிபதிக்கு இருக்கிறது. தடை உத்தரவு பெற்றப்பட்ட நாளில் இருந்து குறித்த நபரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு ரஷ்யாவும், அமெரிக்காவும் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. இதனால் இலங்கை அரசாங்கம் திரிசங்கு நிலையை எதிர்கொண்டுள்ளது.

 

 

 

 

கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்காக வேலை செய்த நபர்கள், அமெரிக்கா அல்லது ரஷ்யா மட்டுமன்றி உலகின் மேலும் பல நாடுகளில் இருந்து பணியாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் இதன்மூலம் வலுத்துள்ளது. குறித்த ரஷ்ய பிரஜை இலங்கையில் தங்கியிருந்தே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

 

 

 

 

 

இந்த ரஷ்யப் பிரஜையினால் அமெரிக்கா – ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.