அமானா தகாஃபுல் 93 மில்லியனை இந்தாண்டில் லாபமாக பெற்றது !! கடந்த ஆண்டு 42 மில்லியனை நட்டமாக கொண்டது

· · 540 Views

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2017 ம் ஆண்டின் அரையாண்டில், 93 மில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 42 மில்லியன் இழப்பு நேரிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

குழுமத்தின் நிகர எழுதப்பட்ட ப்ரீமியமான (GWP) ரூ.1.93 பில்லியன் ஆனது 2016 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% அதிகரிப்பாகும்.

 

 

 

இந்த சாதனையை அடைவதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு நல்கியிருந்தன.

முதலீட்டு வருமானம் குறிப்பிடத்தக்க வகையில் (83% வளர்ச்சியுடன்) ரூ.220.27 மில்லியன்களாக மேம்பட்டதுடன், இதன் பிரதிபலனாக செலவு அடிப்படையிலான செயற்திறன்களும் சிறப்பான வெளிப்பாட்டினை அளித்தன.

அமானா தகாஃபுல் பி.எல்.சி. மற்றும் அமானா தகாஃபுல் மாலைதீவு ஆகியவற்றின் செயற்பாடுகளே இந்த மேம்பாடு மிகுந்த செயற்திறனுக்கு காரணமாகும்.

குறித்த செயற்திறன் தொடர்பில் கருத்துரைத்த அமானா தகாஃபுல் பி.எல்.சி. தலைவர் டயாப் அக்பரலி ´கடந்த 12 மாதங்களில், குழும மீள் கட்டமைத்தல், ஆயுள் நிறுவனத்தினை பட்டியலிடல், உரித்து வினியோகத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்தல் போன்ற ஒழுங்கமைப்பு தேவைகளை பூர்த்தி செய்தல் நிமித்தமாக நேரிட்ட சவால்களுக்கும் மத்தியிலும் குழுமமானது தமது இடத்தினை மேலும் வலுப்படுத்தியவாறு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியினை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

அமானா தகாஃபுல் பி.எல்.சி இன் GWP வளர்ச்சியானது 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10% உடன் இரட்டிப்பாக மாறியது.

இதன் விளைவாக அமானா தகாஃபுல் பி.எல்.சி. யானது, 2016ம் ஆண்டு பெற்றுக் கொண்ட ரூ. 98 மில்லியன் இழப்புடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரூ. 30 மில்லியன்களை இலாபமாக பதிவு செய்துள்ளது.

இதில் நிறுவனங்களுக்கு இடையிலான உரிமை முதலாக விளங்கும் ரூ. 7 மில்லியன்களும் உள்ளடங்கும்.

செயற்திறனை ஊக்குவித்தல் என்ற சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட முடிவு மற்றும் அளிக்கப்படும் சேவைகள் வரிசைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, மோட்டார் காப்புறுதி மீது அதீத சார்பு நிலையை கொண்டிருந்த முன்னைய நிலையை நீக்கி, சேவைத் தொகுப்பில் மீள சமனிலையை மேற்கொள்தல் போன்றவையும் குறித்தசாதனைகள் மீதுதாக்கம் புரிந்தன.

இவை யாவும் கடந்த ஆண்டு இடம்பெற்ற வெள்ளப் பெருக்கிற்கான காப்பீடுகளை அளித்தலில் இடம்பெற்ற சிக்கல்களை போலன்றி, பெரியளவில் 2017ம் ஆண்டு இடம்பெற்ற வெள்ளம் குறித்த காப்பீடுகளை முகாமை செய்ய உதவின.

கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் புதிய நிறுவனம் என்ற நிலையில் பட்டியலிடப்பட்ட அமானா தகாஃபுல் ஆயுள் பி.எல்.சி. ஆனது,

2017ம் ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ. 24 மில்லியனை இலாபமாக பதிவு செய்துள்ளது.

இங்கும், சேவைத் தொகுப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், விவேகமான முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டமையானது முன்னைய ஆண்டின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், நிறுவனம் தமது இலாபத்தினை இரட்டிப்பாக மாற்ற உதவியது என்றால் மிகையில்லை.

மாலைதீவில் இடம்பெற்ற சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அமானா தகாஃபுல் மாலைதீவு பி.எல்.சி. ஆனது,ரூ. 670 மில்லியன் GWP மற்றும் ரூ.44.7 மில்லியன் உயர் இலாபம் ஆகியவற்றை ஈட்டியுள்ளது.

நிறுவனமானது, மாலைதீவு பங்குப் பரிவர்த்தனையில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற நாள் முதல் உபரித் தொகை மற்றும் பங்கு இலாபம் ஆகியவற்றினை தொடர்ச்சியாக அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தகாஃபுல் கருத்தாக்கத்துடனான காப்புறுதி முறைமையினை இலங்கையில் அறிமுகப்படுத்திய நிலையில், குறித்த மூன்று நிறுவனங்களும், தாம் செயற்படும் பரப்பில் முழுமையான தகாஃபுல் செயற்பாட்டாளர்களாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.