அப்பீல் கோர்ட் நீதியரசர் எம்.எம்.ஏ. கபூருக்கு , சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி வழங்க கடும் எதிர்ப்பு!! ஊழல்வாதியாம்

· · 377 Views
மேல்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலப்பிரிவில்  ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இப்போது மேன்முறையீட்டு நீதிபதியாக கடமையாற்றிக்கொண்டிருக்கும்  M,M,A,கபூருக்கு உயர் நீதிமன்ற பதவி வழங்க   ஜனாதிபதி மைத்ரிபால தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் இச்செயலை நீதித் துறையினர் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

2014 செப்டெம்பர் மாதம் MMA கபூர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில்  நீதிபதியாக கடமையாற்றும் காலப்பிரிவில் ஹெரோயின் குடு கடத்தலில் சிக்கிய குற்றவாளிகளை  விளக்கமறியலில் விடுதலை செய்ய  நீதிமன்றித்தின் நீதித்துறையின் சட்டத்திட்டங்களை  மீறி செயற்பட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு.

ஹெரோயின் குடு கடத்தலில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவ விளக்கமறியலில் விடுதலை செய்ய சட்டமா அதிபர் மறுத்த போதும் அவரச குற்றப்பத்திரிகை ஒன்றை கொண்டு வந்து அந்த குற்றவாளிகளை விடுதலை செய்ததே M.M.A .கபூர் மீதான் குற்றச்சாட்டு.

கபூர் அவர்கள் குற்றவாளிகளிடமிருந்து லஞ்சம் பெற்றுகொண்டே இவ்வாறு  சட்டத்தை மீறிசெயற்பட்டார் என்பதே  அவர் மீதான குற்றச்சாட்டு.

இந்த ஊழல் மோசடி தொடர்பில் 2014 செப்டெம்பர் 21 ஆம் திகதி
ராவய பத்திரிகை முதலில் செய்தி  வெளியிட்டு இருந்தது.

இப்படியான ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான MMA கபூர் மீது எந்த விசாரணையும் நடாத்தாமல் கபூருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்  பதவி வழங்கியது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

அந்த ஊழல்வாதிக்கு இப்பதவியை வழங்க மகிந்த ராஜபக்ச 18வது யாப்பு சீர்திருத்தத்தின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததும்  குறிப்பிடத்தக்கது.

நீதிபதி MMA கபூர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலான
முழு அறிக்கைக் கட்டுரை இன்றைய ராவய பத்தரிகையின்
9ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

(ராவய : Kw janaranjana )

Leave a Reply

Your email address will not be published.