அப்பா உள்ளே : F.C.I.D.க்கு கிழி..கிழி..கிழித்த வீரவன்சவின் மகள் விமேஷா..!! என்ன இருந்தாலும் அப்பா இல்லையா..? Video

· · 1661 Views

கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

shehara-jayaweera-11

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவினால் குறித்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர் ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

அரசாங்க வாகனத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது விமல் வீரவன்சவின் மகள் தனது தந்தையை கைது செய்ய வேண்டாம் என கூறி பொலிஸாரை கடுமையாக திட்டியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.