அடுத்த நான்கு மாதங்கள் மட்டுமே புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவராக ஜனாப்.ஹாஜியார் செயற்படுவார் !! அடுத்தது யார் ..?

· · 729 Views

புத்தளத்தின்  சிரேஷ்ட  நிர்வாக  அதிகாரியும்  புத்தளம் பெரிய பள்ளிவாசலின் பிரதம நிர்வாகியுமான ஜனாப்.பீ.எம்.எ. ஜனாப்,இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே பெரிய பள்ளிவாசல் நிர்வாகியாக செயற்படுவார் எனும் அதன் பின்னர் அவர் ஓய்வெடுக்க உள்ளதாகவும்  பெரிய பள்ளிவாசல் செய்திகள் தெரிவித்தன.

 

 

இரண்டாவது முறையாக பிரதம நிர்ர்வாகியாக சேவை ஆற்றிவரும் பீ.எம்.எ. ஜனாப்  அவர்களின் பதவி விலகலுக்குப் பின்னர்  அந்தப்பதவியை யார் வகிப்பார்கள் என்பது பற்றி பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளதாக  பள்ளிவாசலின் பெயர் குறிப்பிட விரும்பாத  குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

 

 

இதே வேளை, புத்தளம் பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தை காலத்திற்குக் காலம்  தப்லீக்  ஜமாஅத், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி ஆகிய இயக்கங்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் புத்தளம் பெரிய பள்ளிவாசலின் செயற்பாடுகளுக்கு புத்தளத்து மக்களின் பொருளாதார ரீதியான  பங்களிப்பானது கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனவே இந்தக் குறைப்பாட்டை நீக்கி  பொதுவான நிர்வாகிகளை தெரிவு செய்யும் படி புத்தளம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள் குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை , முன்னாள்  நகரசபை உறுப்பினரும், தற்போதைய  புத்தளம் தனியார் உப்பு வயல் சங்கத்தின் தற்காலிக செயலாளருமான  ஜனாப்.எஸ்.என்.எம்.சுஹைலை  பெரிய பள்ளிவாசலின் பிரதம நிர்வாகியாக  கொண்டு வருவதற்கு ஒரு தரப்பினர் முயன்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.

 

– ஜலால்தீன்  மரைக்கார்

Leave a Reply

Your email address will not be published.