அடுத்த கட்டத்திற்குள் மஹ்தூன் ஹோட்டல்..!!பிரமிக்க வைக்கும் அவர்களின் படகு ரெஸ்டோரன்ட்

· · 5528 Views

எழில் கொஞ்சும் புத்தளத்து நீல ஏரிக் கரையிலே பால் வெள்ளை நிறத்தில் ஒரு கப்பல் தரை தட்டி நிற்கிறது என்று நான் சொன்னால் உங்களில் எத்தனைபேர் அதை நம்புவீர்கள்? சொஞம் கொழும்பு வீதிப் பக்கமாகப் போய் கொழும்பு முகத்திடலின் இடப் பக்கமாகப் போய் பாருங்கள். ஆனால் ஒன்று. “நோவாவின்” மரக்கலத்தையும்,

“டைடானிக்” கப்பலையும் மனதில் வைத்துக் கொண்டு போனால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் அங்கு அமைந்துள்ள மஹ்தூன் குடும்பத்தின் பால் வெள்ள நிறத்தில் சலவைக் கற்களால் கப்பல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள “Colombo Face Lake City Hotel ” என்ற உணவகத்தைப் பற்றிப் பேசுகிறேன்.


கண்ணுக்கு மையழுகு கவிதைக்குப் பொய்யழகு வியாபாரத்துக்கு விளம்பரம் அழகு ஆனால் மகுதுன் குடும்பத்துக்கு விளப்பரத்தோடு அழகும் ஒரு தனி அழகு போலும். எனவேதான் இன்னும் இரண்டு மாத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள Colombo Face City Hotel” இப்படி ஒரு கப்பல் போல அமைத்துள்ளார்கள். பொய் பொய்யாய் வருணசை செய்யாபமல் மெய் மெய்யாய் புகழந்து சொல்கிறேன் இந்த வெள்ளைக் கப்பல் ஒரு தனி அழகுதான்.

ஊரிலே இருந்த இருக்கின்ற அரசியல் பிரபல்யங்கள் போல மஹ்தூன் என்பவரும் நகரத்தில் புகழ் பெற்றவர்தான். அரவது உணவு வியாபாரச் செயற்பாடுதான் அவரை இந்தப் பிரதேசத்தில் பிரயல்யம் அடையச் செய்கிறது. அந்த நாட்களிலே ஜீவனோபாயத்தின் பொருட்டு சிற்றுண்டி> கஞ்சி வகைகளைத் தயாரித்து விற்று வாழ்வாராத்தைத் தேடிக் கொண்ட மஹ்தூன் பெற்ற ஆண் சிங்கங்கள் தந்தை வழி நடந்து அந்த சிற்றுண்டி வியாபாரத்துக்கு அப்பால் உணவக வர்தக செயற்பாட்டில் இறங்கி பல காலம் ஆகிவிட்டது. வெற்றிகரமாக நடாத்திச் செல்கிறார்கள்.

” இன்டைக்கு எங்க வீட்டீலே கடை சோறுதான்” என்று யாராவது சொன்னால் எந்தக கடையில் வாங்கினீர்கள் என்று கேட்கத் தேவையில்லை. ” மஹ்தூன் ஹோட்டலில்” என்றுதான் பெரும்பாலும் விடை வரும்.

mahdum

நேற்றக் காலை கொழும்பு வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த தருணத்தில்தான் இந்த வெள்ளைக் கப்பல் ஹோட்டல் எனது கண்களுக்குப் பட்டது. அவ்விடத்திலேயே நிறுத்தி இரண்டு படங்களை எடுத்துக் கொண்ட கையோடு இப்போதைய மஹ்தூன் ஹோட்டல் பக்கமாகப் போனே. தந்தை அடிச்சுவடட்டைப் பின்பற்றி அதே உணவக விபாயரத்தில் ஈடுபடும் பெருமைக்குரிய மகன் மஹ்தூன் ரபீக் முன்னால் போய் நின்றேன். அந்த காலை நேரத்தில் மனுசன் கொஞசம் பிஸி. அந்தத் தருணத்தை விட்டால் எனக்கும் வேறு நேரம் இல்லை. எனவே சஸாம் கூறி இடையூறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவரின் படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டேன்.

ஒரு காலம் இருந்தது . இந்த நகரத்தில் உள்ள வர்த்தகர்கள் கடையைத் திறந்தோமா> வியாபாரம் பண்ணினோமா> வீடு போனோமா என்று ஏதே கிடைத்ததில் திருப்தி கண்டு வந்தனர். ஆனால் காலம் இப்போது எவ்வளவே மாறிவிட்டது. வியாரத்துக்கு விளம்பரமும்> கவர்ச்சியும் அவசியம் என்பதை புத்தளம் வியாபார சமுகம் நன்கு உணர்ந்து விட்டது. எனவேதான் இப்போதெல்லாம் புத்தளம் நகரில் நேற்றொரு தோற்றம்> இன்றொரு மாற்றம் …… பார்த்தால் பர்வைக்க நன்கு புரிகிறது.

“Colombo Face Lake City Hotel ” புத்தளத்து மண்ணின் மகனால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று. அந்த இளைஞரின் பெயரை நினைவுபடுத்திக் கொள்வதில் உரிமையாளர் மஹ்தூன் ரபீக்கிற்கு சிரமாக இருந்தது. எனவே இன்னும் இரண்டு மாதங்களில் நிழகவுள்ள திறப்பு விழா பற்றிய சிறப்பு ஆக்கம் ஒன்றை எழுதும்போது அதையெல்லாம் சேர்த்துக் கொள்வோம் என்று கூறி ரபீக்கிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

ஐசக் நியூட்டன்

Leave a Reply

Your email address will not be published.