அடாத்து சபை: குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனவின் நடைப் பயணத்திற்கு அனுசரணை வழங்க மறுத்து விட்ட இலங்கை கிரிக்கெட் சபை

· · 513 Views

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் மேற்கொள்ளும் நன்கொடை நடைப்பயணத்துக்கு அனுசரணை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுப்பு தெரிவித்துள்ளது.

sang

இந்த நடைப்பயணத்துக்கு இறுதிக்கட்டத்திலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அனுசரணை கோரப்பட்டுள்ளதாகவும், எனவே அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மஹேல ஜெயவர்த்தனவுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முகாமைத்துவத்துக்கும் இடையிலான முரண்பாடு காரணமாகவே இந்த அனுசரணை மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் இந்த நடைப்பயணத்துக்கு தனிப்பட்ட ரீதியில் உதவிவருகின்றனர்.

ட்ரய்ல் 2016 என்ற பெயரிடப்பட்ட இந்த நடைப்பயணத்தின் மூலம் 28நாட்களாக 670 கிலோ மீற்றர் தூரப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதியன்று ஆரம்பித்த இந்த பயணம் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முடிவடையவுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணத்தின் மூலம் கிடைக்கும் நிதியைக்கொண்டு, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் புதிய புற்றுநோய் கிசிச்சைப்பிரிவு அமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.